பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் உரை

என்று நமது நம்பிக்கையின் பன்முகத்தைக்குறிப்பிட்டும் கம்பன் பாடியுள்ளதையும் காண்கிறோம்.

ஆம், இல்லை, ஒன்று, பல, குறிப்பிட்டது பொதுவானது. அணுவானது உலகளாவியது, தனியானது, அனைத்துமானது என்பதெல்லாம் இந்திய தத்துவ ஞானக்கருத்துக்களுக்கு உடன்பாடானதேயாகும். எல்லாவற்றிற்கும் மேலாக இப்பேருலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் மனிதன் முதல் புல் பூண்டு செடி கொடி மரம், புழு, பூச்சி, பறவைகள், விலங்குகள் ஈராக உள்ள அனைத்து உயிர்ப்பொருள்களும் மற்றும் அணு முதல் அண்டம் பேரண்டம் வரை கல் மண் கடல் காற்று நிலம் நீர் நெருப்பு ஆகாயம் சூரியன் சந்திரன் கோள்கள் சுடர்கள் முதலிய அனைத்தும் கடவுள் மயம் கடவுள் வடிவம் சர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்னும் விரிவான கருத்தும் நமது நூல்களிலும் சாத்திரங்களிலும் பரந்து கிடக்கக்காண்கிறோம். மனிதன் மீது மட்டுமல்லாமல் இப்பேறுலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்கள் மீதும் இயற்கை மீதும் பற்றுக் கொண்டு அவற்றைப் பாராட்டவும் வழிபடவும் பராமரிக்கவும் பாதுகாக்கவும் நமது நூல்களும் சாத்திரங்ளும் வழிகாட்டுகின்றன. இன்னும் மீன், ஆமை வராகம், சிங்கம், யானை, வானரம், புலி, காளை, எருமை, ஆடு முதலிய விலங்கினங்களுக்கும் துளசி வில்வம் வேம்பு அரசு ஆல் முதலிய பல தாவர இனங்களுக்கும் கிளி, மயில், சேவல்களுடன் காக்கை, முதலிய பல பறவை இனங்களுக்கும் தெய்வீகத்தன்மையைக் கொடுத்து அவற்றைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் நமது சாத்திரங்கள் மற்றும் பொது நூல்கள் வழிகாட்டுகின்றன.

நமது நாட்டில் இந்து தர்மத்தின்படி, சிவன், திருமால், சக்தி, முருகன் ஆகியோருக்கு பெருங்கோயில்களும், மற்றும் சிறு தெய்வங்களுக்கான பல கோடி கோயில்களும் பீடங்களும் இருப்பதையும் அவற்றிற்கான வழிபாடுகளையும் காண்கிறோம். பல நூறு பேர் முதல் பல லட்சக்கணக்கில் மக்கள் திரளும் பொங்கல் விழாக்களையும் பூசைகளையும் பெரும் திருவிழாக்களையும் காண்கிறோம். நமது பெரிய கோயில்கள் வெறும் வழிபாட்டு ஆலயங்களாக மட்டும் அல்லாமல், மரபு வழியிலான பெரிய பெரிய கல்வி நிலையங்களாகவும் தேவபாராயணங்கள் இலக்கிய வாதங்கள் இலக்கிய சங்கங்கள் சிற்பம் இசை, நாட்டியம், வைத்தியம், கணிதம், வானிலை ஆராய்ச்சி முதலிய