பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 107

தவிர்த்து, மையிடுவது மலரிடுவது போன்ற அலங்காரங்களைத் தவிர்த்து, நல்லனவற்றையே செய்தும், நல்ல நூல்களையே படித்தும் விரதம் இருந்தும் உலகில் iள அனைவரும் உய்யப் பாற்கடலில் துயிலும் பரமனைப் படுவோம் என்று மிக அழகாகப் பந்துவராளி ராகத்தில் அமைந்துள்ள இந்தப் பாசுரத்தைப் பலமுறை படித்தாலும்

னாலும் தெவிட்டாத சுவையைத் தருகின்றது. அதே போல, ஒங்கி உலகளந்த உத்தமன் பேர் படி னால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து நீங்காத செல்வம் நிறையும் என்று கோதைப்பிராட்டியார் அறிவுரை கூறி அழைக்கிறார். இன்னும் "போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் துரசாகும்" என்றும், 'திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் htந்து மகிழ்வோம்" என்றும் பாடுகிறார்.

குலசேகரப்பெருமாள் தமது பெருமாள் திருமொழியில் வல்லோரும் வாழவேண்டும், சுகமும் மகிழ்ச்சியும் வளர வேண்டும், இந்த வானமும் வானரரும், இந்த மண்ணும் இந்த மண்ணுலகில் உள்ள மனிதரும், வாழவேண்டும், துன்ப துயங்களெல்லாம் அகல வேண்டும், சோர்வு அகல வேண்டும், சுகம் வளரவேண்டும், எல்லா உள்ளங்களும் மகிழ்ச்சியடைய வேண்டும், தொண்டர்கள் வாழவேண்டும், வஸ்லோரும் திருவரங்கன் கோயில் வாயில்முன் அன்புடன் ச. வேண்டும் என்றெல்லாம் கூறிப் பாடுகிறார். " வன்பெ ருவா னகமுய்ய அமர ருய்ய

மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச்

சுகம்வளர அகமகிழும் தொண்டர் வாழ அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும்

அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்

இசைந்துடனே என்றுகொலோ விருக்கும் நாளே?” டி . து அவரது அருமையான பாடல்.

குலசேகரப்பெருமான் வித்துவக்கோட்டம்மானை வே.ண்டி மிக அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார்.