பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

"பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து மெயப்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை" என்று ஆழ்வார் பாடுகிறார்.

"தந்தையும், தாயும் மக்களும் மிக்க சுற்றமும், சுற்றி நின் றகலா பந்தமும், பந்த மறுப்பதோர் மருந்தும், பான்மையும், பல்லுயிர்க் கெல்லாம் அந்தமும் வாழ்வும் ஆயவெம் பெருமான்” என்று ஆழ்வார் திருவரங்கனை நினைத்து, அவ்வரங்கனை நமது வாழ்வோடினைத்து அதில் நம்மையும் இணைத்துப் பாடி மகிழ்கிறார்.

இராமன் குகனைத் தோழனாக, உடன்பிறந்தோனாக ஏற்று உரையாடியதைக் கம்பன் தமது இராமாவதாரக் கதையில் குகப்படலத்திலும் வேறு சில இடங்களிலும் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். அது இராமனுடைய சகோதரத்துவக் கொள்கையை வெளிப்படுத்துகிறது. "குகனோடு ஐவர் ஆனோம்” என்னும் கம்பனது காவிய அடிகள் மிகவும் பிரபலமானவைகளாகும்.

இக்கருத்தை ஆழ்வார்களும் பல இடங்களிலும் பால பாசுரங்களிலும் மிகவும் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பாடுகிறார்கள். அப்பாசுரங்களின் உட்கருத்தைச் சகோதரத்துவக் கருத்தை நாம் மனத்தில் கொள்ளவேண்டும்.

“ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா

திரங்கி மற்றவர்க் கின்னருள் சுரந்து மாழை மான நோக்கியுன் தோழி

உம்பி எம்பிஎன் றொழிந்திலை உகந்து தோழன் நீயெனக் கிங்கொழி என்ற

சொற்கள் வந்துஅடி யேன்மனத் திருந்திட” என்று திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

"வாத மாமகன் மர்க்கடம் விலங்கு

மற்றோர் சாதியென் றொழிந்திலை உகந்து காதல் ஆதரம் கடலினும் பெருகச்

செய்தக வினுக்கில்லை கைம்மா றென்று கோதில் வாய்மையி னாயொடு முடனே

உண்பன்நான் என்றஒண் பொருள் எனக்கும்

ஆதல் வேண்டும்"