பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 113

என்று ஆழ்வார் பாடுவது அவருடைய ஆசை மட்டுமல்ல, அ. கருத்து மற்றவர்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுமாகும். இன்னும்,

“நின்ற வினையும் துயரும் கெட, மாமல ரேந்தி சென்று பணிபமின், எழுமின், தொழுமின், தொண் ா காள்” என்று திருமால் தொண்டிற்கு அனைவரையும்

அழைக்கிறார்.

திருமங்கையாழ்வார் உலக வாழ்க்கையை நன்கு அனுபவித்தவர். அவருடைய கள்ளமில்லாத திருமால் சேவை க. .ணமாக எம்பெருமானின் அருளால் உயர்வான வ, மனமுண்டாகிறது. திவ்யமான நாராயண நாமத்தைக் க.ண்டு கொள்கிறார். அதனால் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறார்.

"வாடினேன் வாடி, வருந்தினேன் மனத்தால்

பெரும்துயர் இடும்பையிற் பிறந்து, கூடினேன் கூடி, இளையவர் தம்மொடு

அவர்தரும் கலவியே கருதி, ஒடினேன் ஒடி உய்வதோர் பொருளால்,

உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து, நாடினேன் நாடி, நான்கண்டு கொண்டேன், நாரா யனாவென்னும் நாமம்’ . பன்று மனமுருகப் பாடித் திருமால் சேவையில் தம்மை பருமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். தமது சொந்த வாழ்க்கை அனுபவங்களின் மூலம் உண்மைகளைக் கண்டு தெளிந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசுரங்களைப் யவர். உண்டியும் பெண்டிருமே பெருவாழ்வு என்றிருந்த நிலை மாறி, திருமால் சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். தமது அனுபவத்தின்மூலம் கண்டறிந்த ப மண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி மகிழ்கிறார். அவர் திருவல்லவாழ் பிரானைப்பற்றிய பாசுரங்களில்,

" தந்தைதாய் மக்களே சுற்றமென்று

உற்றவர் பற்றிநின்ற பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ

பழியெனக் கருதினாயேல்"

என்றும்,