பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 129

இன்னும், "அம்மூன்றும் ஆராயில் தானே அறம் பொருள் இன்பமென்று ஆரார், இவற்றின் இடையதனை a ய்துவார் சீரார் இருகலையும் எய்துவர்” என்று அறம் .ெ பருள் இன்பம் என்பதில் இடையில் உள்ள பொருட் செல்வத்தைப் பெற்றால் மற்ற இரண்டும் பெறுவர் என்று

ஆழ்வார் கூறுவதைக் காணலாம்.

திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமடல் ல்களில்,

"முன்னம் திசைமுகனைத் தான்படைக்க மற்றவனும்

முன்னம் படைத்தனன் நான்மறைகள் - அம்மறைதான் மன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில் நன்னெறிமேம் பட்டன நான்கன்றே!" என்று குறிப்பிடுகிறார்.

வாழ்க்கைப் பயனிடுகளை அறம் பொருள் இன்பம் வீடு பன்னும் புருடார்த்தங்களாக வகுத்துக் கூறியுள்ள சிறப்பு இந்தியச் சிந்தனையின் அறிவுத்துறையின் தலைசிறந்த ைப்பாகும். உலகச் சிந்தனையின் ஒப்புயர்வற்ற ைப்பாகும்.

கடையவர்

உடையவர் என்று அன்பாக வழங்கப்படும் பூரீமத் இாமானுஜாச்சாரியார் பெருமான் தலைசிறந்த தத்துவ ளு னியாக வைணவத்தைப் பிரபலப்படுத்தியும் உறுதிப் படுத்தியும் நிறுவிய கர்ம யோகியாக, பக்தி மார்க்கத்தின் வழிகாட்டியாக இந்திய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவர்; வைணவ வரலாற்றில் மிக உயர்வான தனி இடம் பெற்றுள்ளவர். இராமானுஜருடைய வரலாறு ஒரு தனி சகாப்தம். அவர் மிகப்பெரிய சமூகப் புரட்சியாளர். இராமானுஜருக்குப் பெருமாள் கோயில்கள் பலவற்றிலும் தனிச் சந்நிதிகளும் உள்ளன. அவர் மக்களுடைய உள்ளங்களில் தனி இடம் பெற்றுள்ளார்.

திருவரங்கத்தமுதனார், இராமானுஜர்மீது அந்தாதி பாடியுள்ளார். அவர் அருளிச்செய்துள்ள இராமானுச நூற்றந்தாதி நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தின் பகுதியாகப் பாராட்டிப் போற்றப்படுகிறது.