பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 137

திருத்தலங்களுள் திருவேங்கடம் முக்கியமான ஒன்றாகும். திருவேங்கடத்தின் பெருமைகளைப்பற்றி ஆழ்வார்கள் வளமான பாசுரங்களைப் பாடியுள்ளார்கள். சிலப்பதிகாரத் திலும் மாங்காட்டு மறையோன் மூலமாக அடுத்த ஒர் இ த்திலும் திருவேங்கடத்தைப்பற்றிய குறிப்பைப் பின்னர்க்

பண்போம்.

திருவேங்கடத்தைப்பற்றிக் கம்பன் மிக அற்புதமான கவிதைகளில் பெருமைப்படக் கூறுகிறார். சீதையைத் தேடுவதற்கு அனுமன் தலைமையில் தெற்கு நோக்கிச் .ெ ல்லும் படைப்பிரிவிடம் எந்த வழியில் செல்லவேண்டும் என்று சுக்கிரீவன் கூறுகிறான். -

அப்போது, “அருந்ததி மலையைத் தாண்டித் திருவேங்கடமலை வழியாகச் செல்லுங்கள். ஆனால், அந்த மலையை நெருங்கிப் போக வேண்டா. அங்கு போய்த் தங்கிவிட்டால் உங்கள் பாவங்கள் நீங்கி வீட்டுலகம் சென்று விடுவீர்கள். சீதையைத் தேடும் பணி தடைப்பட்டுவிடும். எனவே, அதை விலக்கிவிட்டு மேலும் தெற்கே செல்லுங்கள் என்று கூறுகிறான். இங்கு திருவேங்கடத்தைக் குறித்துக் கூறும் கம்பனுடைய பாடல்கள் மிகவும் சிறப்பானவை.

"வடசொற்கும் தென்சொற்கும் வரம்பாகி நான்மறையும் மற்றை நூலும் இடைசொற்ற பொருட்கெல்லாம் எல்லையாய்

நல்லறிவுக்கு ஈறாய், வேறு புடைசுற்றும் துணையின்றிப் புகழ்பொதிந்த

மெய்யேபோல் பூத்து நின்ற உடைகற்றும் தண்சாரல் ஓங்கியவேங்

கடத்தில்சென்று ஊர்தின் மாதோ !” என்று குறிப்பிட்டு, மேலும் விரிவாகத் திருவேங்கடத்தில் பெருமைகளைப்பற்றிக் கம்பன் பேசுகிறார்.

அனுமன் தலைமையில் வானரப் படைப்பிரிவு சீதையைத் தேடிச் சுக்கிரீவன் குறித்தபடி தெற்கு நோக்கிச் செல்லும்போதும் அனுமன் படை திருவேங்கடத்தைக் கடக்கும்போதும் அம்மலையின் பெருமைகளைப்பற்றிக் கம்பன் கூறுகிறார்.