பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 143

மறையே ன் மூலம் குறிப்பிடும் இளங்கோவடிகள், நிருவங்கத்தையும் திருவேங்கடத்தையும் அவற்றின் அழகிய யையும் வளத்தையும் பற்றி மிகவும் சிறப்பாக விவரித்துக் கூறுவதையும் காண்கிறோம்.

நீண் நெடிய பொன்மயமான மலைமீது நீல நிறமான கா, மேகம் விரிந்து படர்ந்து படிந்திருப்பதைப்போல, ஆயிரம் கலைகளைக்கொண்ட ஆதிசேடன் படம் விரித்துள்ள பiபனைமீது, பலரும் கூடி வணங்கித் தொழுது போற்றிப் (11 ம் வண்ணம், விரிவான அலைகள் நிரம்பிய காவிபியாற்றின் இடைப்பட்டுள்ள இடமாகிய திருவரங்கப் 1. பிய கோயிலில், திருமகள் விரும்பி உறைகின்ற திரு.மார் பினையுடைய திருமால் கிடந்தருளியுள்ள திருக்கோலம் என்று திருவரங்கத்தில் திருவமர்மார்பன் .ெ ந்தவண்ணம் என்று மிகவும் சிறப்பித்துக் கூறுகிறார், ().ாங்கோவடிகளார்.

இனி, வேங்கட மலையைப்பற்றி, மிகுந்த அருவி நீரினையுடைய வேங்கடம் எனப்படும் மிக உயர்ந்த மலையின் யிென் மீது இருமருங்கிலும் விரிந்த கதிர்களை விசிக்கொண்டிருக்கிற ஞாயிறும் திங்களும் விளங்குகின்ற உயர்ந்த இடைப்பட்ட நிலத்தில், நல்ல நீல நிறத்தினையுடைய மேகம், மின்னலாகிய ஒளிமிகுந்த ஆடையை உடுத்தி, அழகு விளங்கும் இந்திரவில்லாகிய அணி அணிந்து நின்றாற்போல் பகைவரை அடக்கி ஒடுக்கும் சக்கராயுதத்தையும், பால் போலும் வெண்மையான சங்கினையும் அழகிய தாமரை மலர் போன்ற தம் கைகளிலே ஏந்தி, அழகு விளங்கும் ஆரத்தை மார்பிலே அணிந்து, பொன்னிறப் பூக்களாகிய ஆடையுடன் விளங்கித் தோன்றும் சிவந்த அழகிய கண்களையுடைய திருமாலின் நின்ற கோலத்தையும் செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் - என்று சிறப்பித்துக் கூறுவதையும் காண்கிறோம். இவ்வாறு 'நெடியோன் கிடந்த வண்ணத்தையும் நின்ற வண்ணத்தையும்" எனக்குக் காட்டு என்று என் கண்கள் உள்ளத்தை வற்புறுத்தி வேண்டிக்கொண்டதால் நான் இங்கு வந்தேன் என்று மாங்காட்டு மறையோன் தனது பக்தி