பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

உணர்வுடன் கூடிய கருத்துகளைக் குறிப்பிடுவது காப்பியத்தின் சிறப்பான பகுதியாகும்.

இனி, அம்மாங்காட்டு மறையோனிடம் மதுரைக்குச் செல்லும் வழியைப் பற்றிய விவரங்களைக் கோவலன் கேட்டபோது அம்மறையோன் மூன்று வழிகளைப்பற்றிக் குறிப்பிடுகிறான். அவற்றுள் ஒன்று திருமாலிருஞ்சோலை மலை வழியாக மதுரைக்குச் செல்லும் வழியாகும். ---

இங்கு திருமாலிருஞ்சோலை மலையைப்பற்றியும், அக்கோயில் மற்றும் அதன் தீர்த்தங்கள்பற்றிய சிறப்புகளைப் பற்றியும் மாங்காட்டு மறையோன் மிக விரிவாகக் குறிப்பிடுவதை இங்கு இளங்கோவடிகள் தமது காப்பியத்தில் சிறப்பித்துக் கூறுவதைக் காண்கிறோம். -

சோலை மலைப்பகுதியின் வளம், குளங்கள் மற்றும் இதர நீர்நிலைகள், ஊற்றுகள், வயல்கள், பூஞ்சோலைகள், மருத நிலச் சிறப்புகள் பற்றியெல்லாம் காப்பியம் குறிப்பிடுகிறது. -

"செவ்வழிப் பண்ணிற் சிறைவண்டு அரற்றும்

தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்” என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

பண் இசைத்துப் பாடும்போது காலை, மாலை, பகல், இரவு ஆகிய சூழல்களுக்கேற்ற பண் இசைத்துப் பாடுவது பாடுவோர் மரபும் சிறப்புமாகும். சிறகுகளுடன் கூடிய வண்டுகள் மலர்களைச் சுற்றிச் சுற்றி வந்து தேன் எடுக்கும் நோக்குடன் காலைப்பண் - அதாவது செவ்வழிப்பண் - பாடிப் பறந்துகொண்டிருந்த ஏரி குளம் முதலிய நீர்நிலைகள், அவைகளில் நிறைந்திருந்த தாமரை மற்றும் நீரில் படர்ந்துள்ள இதர மலர்கள், ஏரி குளங்களிலிருந்து நீர் பாயும் தாழ்ந்த வயல்கள், அவ்வயல்களைச் சூழ்ந்த சோலை வனங்கள், குளிர்ந்த பூஞ்சோலைகள் நிறைந்த மருத நிலச் சிறப்புகள், பின்னர் இடையிடையே உள்ள அடர்த்தியான மரங்கள் நிறைந்த காடுகள் முதலியன கடந்து