பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 179

பொன் நிறைந்த செல்வ வளம், அவைமூலம் தொட்டில் செய்யும் தொழில்வளம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் நமது நாடு அடைந்துள்ள உயர்வை இந்தச் சிந்தனைகள் வெளிப்படுத்துகின்றன.

இனி, கபாலி ஈசன் அரை வட்டம் கொண்டுவந்து கொடுத்தார் என்றும், இந்திரன் கிண்கிணி கொண்டுவந்து கொடுத்தான் என்றும், அமரர்கள் அரைஞாண் கொண்டு வந்து கொடுத்தார்கள் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.

"சங்கின் வலம்புரியும், சேவடிக் கிண்கிணியும், அங்கைச் சரிவளையும், நானு மரைத்தொடரும், அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்” என்பது ஆழ்வார் பாடல். - -

அழகிய ஐம்படையும் ஆரமும் குபேரன் கொண்டு வந்தான். ஒளிமுத்தின் ஆரமும் சாதிப்பவளமும், சந்தச் சரிவளையும் வருணன் கொண்டுவந்து கொடுத்தான். திருமங்கை திருத்துழாய் மாலை அனுப்பி வைத்தாள். பொற்சுரிகை, காம்பு கனகவளை, உச்சிமணிச் சுட்டி, ஒண்தாள் நிரைபொற்பூ ஆகியவைகளைப் பூதேவி கொடுத்து அனுப்பிவைத்தாள். இனி, மெய் தி மிரும் நானப் பொடியோடு மஞ்சளும், செய்ய தடங் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துாரமும் கலந்து துர்க்கை கொண்டுவந்து கொடுத்தாள் என்றெல்லாம் ஆழ்வார் விவரித்துக் கூறுகிறார்.

"வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய செஞ்சொல்லை"ப் புதுவைப் பட்டர்பிரான் எடுத்துக் கூறியுள்ளதை இல்லந்தோறும் கண்ணனை நினைந்து நமது குழந்தைகளை நினைத்துத் தாலாட்டும் பாடலாக அமைந்துள்ளது.

கண்ணனின் அம்புலிப் பருவத்தை, செங்கீரைப் பருவத்தை, சப்பாணிப்பருவத்தை, தளர்நடைப் பருவத்தை, அச்சோப் பருவத்தை, பூச்சி காட்டி விளையாடும் பருவத்தை, இன்னும் பால் உண்ணுவதை, சோறு உண்ணுவதைப்பற்றியெல்லாம் ஆழ்வார் பாடுகிறார். இவ்வாறு நமது குழந்தைகளின் ஒவ்வொரு பருவத்தையும்