பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 181

அத்துடன் நாச்சியார் தேவஸ்தானம் என்னும் பெயரில்தான் சுற்றிலும் உள்ள இதர திருமால் திருத்தலங்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆண்டாள் கோயில் திருவிழா மிகவும் சிறப்புமிக்கது. ஆண்டாள் (கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில்) நள ஆண்டு ஆடி மாதம் வளர்பிறையில் சதுர்த்தசி திதியில் செவ்வாய்க்கிழமை பூர நட்சத்திரத்தில் அவதரித்தார் என ஆழ்வார்கள் வரலாறு குறிப்பிடுகிறது.

"திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே

பெரும்பூதுார் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்று ஆண்டாள்வழித் திருநாமப்பாடல் குறிப்பிடுகிறது.

ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப் பூரத்தன்று ஆண்டுதோறும் திருவில்லிபுத்துாரில் நடைபெறும் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள், ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூடுவர். சாதி, சமய, இனம், மொழி, பால் வேறுபாடின்றி இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடுவர். திருவில்லிபுத்துரர் தேர் நமது நாட்டிலுள்ள மிகப் பெரிய தேர்களுள் ஒன்று. முன்பெல்லாம் தேர் புறப்படத் தொடங்கி நிலைக்குவரப் பல மாதங்களாகும். தேர் இழுக்கும் சேவையில் எந்த வேறுபாடுமின்றிப் பல்லாயிரம் மக்கள் பங்கு கொள்வர்.

ஆண்டாள் அரங்கனோடு இரண்டறக் கலந்ததாக ஐதீகம் ஆண்டாள் பாடியுள்ள திருப்பாவைப் பாடல்கள் உலகப் பிரசித்தம். மார்கழி மாதம் அநேகமாக எல்லாத் திருமால் திருத்தலங்களிலும் திருப்பாவைப் பாடல்கள் பாடப் படுகின்றன. திருப்பாவைப் பாடல்கள் என்பவை தனி மனிதன் தனியாகச் சென்று, ஒரிடத்தில் அமர்ந்துகொண்டு ஆண்டவனை நினைத்துப் பாடப்படுபவையல்ல. தனியாகப் பூசையறையில் அமர்ந்துகொண்டு ஆண்டவன் புகழைப் பாடப்படுபவை அல்ல.

ஆண்டாள், ஆண்டவன் புகழ் பாட - கண்ணன் புகழ் பாட - அனைவரையும் - ஊரில் உள்ள அனைவரையும் -