பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 185

"மென்னடை யன்னம் பரந்துவிளை யாடும்

வில்லிபுத் துனருறை வான்தன் பொன்னடி காண்பதோ ராசையி னால்என்

பொருகயற் கண்ணினை துஞ்சா இன்னடி சிலோடு பாலமு துாட்டி

எடுத்தவென் கோலக் கிளியை உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே

உலகளந் தான்வரக் கூவுவாய்” என்று ஆண்டாள் பிராட்டியார் மிகவும் அழகாகத் தமது திருமொழி மன்னுபெரும் புகழ் பாடல்களுள் ஒன்றாகப் பாடுவதைக் காண்கிறோம். இப்பாடலில் அன்னமும் கிளியும் குயிலும் வருகின்றன. அத்துடன் அடிசிலோடு பாலும் இசைந்து அமுதாக வருவதையும் காண்கிறோம். வாழ்க்கை ாசனை இன்பத்துடன் இணைத்துத் திருமால் வழிபாட்டை ஆழ்வார் பெருமாட்டி வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். நமது நாட்டில் ஒர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வது என்பது வெறும் தனி நபர் நிகழ்ச்சியன்று, அது ஒரு குடும்ப நிகழ்ச்சி மட்டுமன்று, அது ஒரு சமுதாய நிகழ்ச்சியும் சமுதாய விழாவுமாகும். திருமண நிகழ்ச்சியைத் திருமண விழா என்றே குறிப்பிடுகிறோம். திருமண விழா ஏற்பாடுகள், பந்தல், தோரணங்கள், அலங்காரங்கள், மேளதாளங்கள், மனமாலை சூட்டுதல், அந்தணர் மந்திரம் கூறல், தி வலம் வருதல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், மஞ்சன நீராட்டுதல், நலங்குப் பாடல், ஊர்வலம் வருதல், ர்ே செய்தல், மொய் செய்தல், ஊராரும் சுற்றமும் சூழவிருத்தல், விருந்தளித்தல் முதலிய பல நிகழ்ச்சிகளும், பல குடும்ப நிகழ்ச்சிகளும் சமூக நிகழ்ச்சிகளும் இணைந்தவை, நிறைந்தவை. -

நாராயணன் நம்பி தம்மைக் கைத்தலம் பற்றி, மனம் புரிந்துகொள்வதாகக் கனாக் கண்டதாக அற்புதமான பாடல்களைக் கோதைப் பிராட்டியார் பாடியுள்ளார். அவற்றில் நமது நாட்டில் பிறந்த மக்கள் அனைவரின் குடும்பங்களிலும் நிகழும் திருமண விழா நிகழ்ச்சியாகத்