பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

வழிபாடுகளுடனும் இணைத்து அற்புதமாக ஆழ்வார்கள் தங்கள் பக்திப் பாடல்களில் எடுத்துக் காட்டுகிறார்கள். குலசேகரப் பெருமான்

குலசேகராழ்வார் சேரமன்னர். அரச குலத்தில் பிறந்தவர். திருமாலிடம் அளவற்ற பக்தி கொண்டு தமது அரச பதவியைத் துறந்து பெருமாள் சேவையில் ஈடுபட்டவர். அவர் திருவரங்கத்தில் உள்ள அரங்கனைப்பற்றி உள்ளம் உருகிப் பாடுகிறார். மற்ற அடியார்களுடன் அமர்ந்து அரங்கனை வழிபட முனைகிறார். வானகமும் தேவர்களும் மண்ணும் மண்ணுலகில் உள்ள மனிதரும் உய்ய வேண்டும் என்று பாடுகிறார். உலகில் துன்பமும் துயரமும் அகல வேண்டும் என்றும், மக்களுக்கு எல்லாச் சுகங்களும் ஏற்பட வேண்டும் என்றும், திருமால் தொண்டர்கள் வாழ வேண்டும் என்றும், அவர்களுடன் சேர்ந்து அணியரங்கன் திருமுற்றத்தில் வாசலில் தாமும் வாழ வேண்டும் என்றும் பாடுகிறார். கூடி வாழ்ந்து அரங்கனைத் தொழ வேண்டும் என்பது குலசேகரப் பெருமானின் தணியாத விருப்பமாகும். அதையே தமது பாடல்களில் குறிப்பிடுகிறார்.

"வன்பெரு வானக முய்ய அமர ருப்ய

மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச்

சுகம்வளர அகமகிழும் தொண்டர் வாழ அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்.

அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கவ. இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்

இசைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே! என்று ஆழ்வார் பாடுகிறார்.

அடியார்களின் பெருங்கூட்டத்தோடு தாமும் நின்று திருமாலை வழிபட ஆழ்வார் விரும்புகிறார். இங்கு பக்தி இயக்கம் மக்களியக்கமாகக் காட்சி தருகிறது. திருமாலையும் திருப்பள்ளியெழுச்சியும்

திருமால் வழிபாட்டில் ஆழ்வார்களின் துதிப்பாடல்கள் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. அப்பாடல்களில்