பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

செய்யவேண்டும்; கூட்டாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அவனுடைய பெருமைகளையும், அருஞ்செயல் களையும் மக்களுக்கு எடுத்துக் கூறி, அவ்வழிபாட்டில் மக்களையும் ஈடுபடுத்த வேண்டும். அதனால் அனைவருக்கும் புகழும் பெருமையும் கிடைக்கும் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

பஜனை செய்வது, வீதிவழியாகக் கூட்டாகச் சென்று திருமால் பெருமைகளை இசையுடன் பாடிக்கொண்டு போவது திருமால் வ்ழிபாட்டில் ஆழ்வார்கள் அனுசரித்த ஒரு வழிமுறையாகும்.

“சாது சனத்தை நலியும்

கஞ்சனைச் சாதிப் பதற்கு ஆதியஞ் சோதி யுருவை

அங்குவைத் திங்கு பிறந்த வேத முதல்வனைப் பாடி

விதிகள் தோறும்துள் ளாதார் ஒதி யுணர்ந்தவர் முன்னா

என்ச விப்பார் மனிசரே?” என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

அனைவரையும் திருமால் வழிபாட்டில் இணைக்கும் நோக்கத்தில்,

"செயப்ய தாமரைக் கண்ண னாப்உல கேழும் உண்ட அவன்கண்டீர், வையம், வானம், மணிசர், தெய்வம்மற்

றும்மற்றும் மற்றும் முற்றுமாப் செய்ய சூழ்சுடர் ஞான மாய்வெளிப்

பட்டி வைபடைத் தான்பின்னும் மொய்கொள் சோதியொ டாயி னான்.ஒரு

மூவ ராகிய மூர்த்தியே" என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

புலவர்களையும், கவிஞர்களையும், வள்ளல்களையும் மன்னர்களையும் பிரபுக்களையும் பாடி, பரிசில் பெற்று வாழ்வதைக் கண்டித்து, வெறும் பரிசுக்காக மனிதர்களின் புகழ் பாடி வெற்று வாழ்வு வாழாதீர்கள். திருமாலையே