பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தமிழும் தமிழ்நாடும் 229

என்பது அரங்கேற்றுக்காதையின் நிறைவான வெண்பா வாகும். இவ்வெண்பா, தமிழ்மொழியின் இயல் இசை நாடகத்தின் சிறப்பைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

     "பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
      பசியும் பிணியும் பகையும் நீங்கி 
      வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி 
      மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும் 
      மூதிர்ப் பெண்டிர் ஒதையிற் பெயர" 

என்று குலவையிட்டுப் பாடி, மன்னனுக்கு ஏற்படும் இடையூறுகள் ஒழிகவெனக் கூறுவது தமிழ் மரபாகக் காப்பியத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதில் இளங்கோவடி களின் உயர்ந்த சமுதாயச் சிந்தனை வெளிப்படுகிறது.

      “தாங்கா விளையுளும் காவிரி நாடும்" 

என்று சோழநாட்டின் சிறப்பைப்பற்றி இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

      "உழவர் ஒதை, மதகுஒதை
           உடைநீ ரோதை தண்பதங்கொள் 
       விழவர் ஒதை சிறந்தார்ப்ப
           நடந்தாய் வாழி காவேரி" 

என்று காவிரியின் சிறப்பையும் சோழநாட்டின் வளத்தையும் கூறும்படியாக அடிகளார் குறிப்பிடுகிறார். மேலும்,

      "வாழி யவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி
       ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி, 
       ஊழி உய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும் 
       ஆழி யாழ்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி" 

என்றும் காவிரியின் சிறப்பைப்பற்றிக் கூறுகிறார்.

       புகார்க் காண்டத்தின் வேனிற்காதையின் 

தொடக்கமாக

      "நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
       தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு 
       மாட மதுரையும் பீடார் உறந்தையும் 
       கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும் 
       அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்"