பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

என்னும் கவிதை அடிகள் மூலம் இளங்கோவடிகளார் தமிழகத்தின் ஒற்றுமைக் கருத்தையும் ஒன்றிணைப்பு உணர்வையும் எடுத்துத் தமிழகம் என்னும் கருத்து வடிவத்தை உருவாக்கியுள்ளதைக் காண்கிறோம்.

இவை மிகச்சிறந்த பிரபலமான பாடல் அடிகளாகும். இளங்கோவடிகளார் காலத்தில் தமிழகத்தின் எல்லையாக வடக்கே நெடியோன் குன்றமும் - திருவேங்கடமலையும் தெற்கே தொடியோள் பெளவமும் - குமரிக்கடலும், கிழக்கிலும் மேற்கிலும் கடல்களையும் கொண்ட எல்லை களையுடைய தமிழ்த் தண்புனல் நன்னாடு இருந்தது. இங்கு தமிழகத்தின் பிரதேச ஒற்றுமையும் இணைப்பும் கூறப்படுகின்றன. அத்துடன் மாடங்கள் நிறைந்த மதுரை, பெருமை பொருந்திய உறையூர், ஆரவாரம் மிக்க வஞ்சி மாநகர், கடல் ஒலிமிக்க புகார் நகரம் ஆகியவை தமிழக அரசுகளின் தலைநகரங்களாக விளங்கின என்பதும் காப்பியச் செய்தியாகும். இதன்மூலம் தமிழகத்தின் மொழி, கலாச்சாரம், தொழில், வாணிபம் ஆகிய பண்பாட்டின் ஒற்றுமைக் கருத்தும் வெளிப்படுத்தப்படுகிறது.

புகார்க் காண்டத்தின் முடிவுரைக் கட்டுரையாக : "முடியுடை வேந்தர் மூவ ருள்ளும் -oதொடிவிளங்கு தடக்கைச் சோழர்குலத் துதித்தோர் அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் ஒடியா இன்பத் தவர்உறை நாட்டுக் குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம் தெய்வக் காவிரித் தீதுசீர் சிறப்பும் பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும் அரங்கும் ஆடலும் துனககும் வரியும் பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும் தினைநிலை வரியும் இணைநிலை வரியும் அனைவுறக் கிடந்த யாழின் தொகுதியும் ஈரேழ் சகோடமும் இடநிலைப் பாலையும் தாரத்து ஆக்கமும் தான்.தெரி பண்ணும்