பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

இதே போல, மதுரைக்காண்டத்தின் முடிவில் பாண்டிய நாட்டின் சிறப்புகளையும், வஞ்சிக் காண்டத்தின் முடிவில் சேரநாட்டின் பெருமைகளைப்பற்றியுமான பாடல்களைக் காணலாம்.

மதுரையைப்பற்றிக் குறிப்பிடும்போது இளங்கோவடிகளார் "தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதிர் மதுரை” என்று குறிப்பிடுகிறார். பாண்டியநாட்டைத் தமிழ்நாடு என்றும் தென்தமிழ்நாடு என்றும் பெயரிட்டு அழைப்பதுண்டு. அது சிறப்பு நிறைந்த குறிப்பாகும்.

"பஃறுளி ஆற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்திசை ஆண்ட தென்னவன் வாழி' என்று இளங்கோவடிகளார் மதுரைக்காண்டத்தின் காடு காண் காதையில் குறிப்பிடுகிறார். இந்தப் பாடல் அடிகளில் தமிழகத்தின் தெற்கில் இன்னும் குமரிமுனைக்குத் தெற்கில் இருந்த தமிழகத்தின் பகுதிகளைக் கடல் கொண்டதுபற்றிய செய்தியைக் காண்கிறோம். அந்த இழப்பை ஈடு கட்டுவதற் காகப் பாண்டிய மன்னன் வடதிசைக் கங்கையையும் இமயத்தையும் கைக்கொண்டு தென்திசையை ஆண்டான் என்றும் அடிகளார் பாண்டிய மன்னனைச் சிறப்பித்துக் கூறுகிறார்.

மதுரைக்காண்டம் வேட்டுவ வரிப்பாடல்களில், தெய்வம் ஏறப்பெற்ற சாலினி சாமியாடிக்கொண்டே கண்ணகியைக் குறித்துப் புகழ்ந்து கூறுவதாகக் குறிப்பிடப் படும் காப்பிய அடிகள்

"கணவனோடு இருந்த மணமலி கூந்தலை

இவளோ கொங்கச் செல்வி குடமலை யாட்டி,

தென்தமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து

ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய

திருமா மணி” என்பவையாகும். இவற்றில் கண்ணகியைத் தென்தமிழ்ப் பாவை என்று அடிகளார் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.