பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 233

மதுரைக்காண்டம் புறஞ்சேரி இறுத்த காதையில், "பகலில் வெயில் கொடுமை, கொடுங்கோல் மன்னன் ஆட்சிபோல உள்ளது. எனவே, இரவில் பயணம் மேற்கொள்ளலாம்” என்று கோவலன் கூறக் கவுந்தி அடிகளும், அதை ஏற்று மூவரும் பயணம் தொடங்கினர். வானில் சந்திரனும் நட்சத்திரங்களும் தோன்றின. இந்தக் காட்சியை மிகநுட்பமாகத் தென்னவனான பாண்டிய மன்னனின் குல முதல்வனான சந்திரன் தோன்றினான் என்று அடிகளார் குறிப்பிடுகிறார்.

"கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்

படுங்கதிர் அமையம் பார்த்திருந் தோர்க்குப் பன்மீன் தானையொடு பால்கதிர் பரப்பித் தென்னவன் குலமுதல் செல்வன் தோன்றித் தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும்" என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

இனிய தமிழைத் தென்றலுக்கு ஒப்பிட்டு, பொதிகை மலையில் தோன்றி, மதுரை நகரில் வளர்ந்து, புலவர் நாவில் பொருந்திய தமிழ்த் தென்றலோடு சேர்ந்து பால் நிலா போன்ற வெண்கதிர்கள் பூமிப்பாவைபtது சொரிந்தன என்னும் பொருளில்,

"மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து

புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு பானிலா வெண்ணிலா பாவைமேல் சொரிய”

என்று காப்பிய அடிகள் மிக அழகாகக் குறிப்பிடுகின்றன.

தமிழ்ப்புலவர்கள் போற்றும் பொதிகைத் தென்றலைக் காட்டிலும் சிறந்ததான மதுரைத்தென்றல் பல வகை மனத்துடன் வந்தது. எனவே, மதுரை மாநகரம் அருகில் வந்துவிட்டது என்னும் பொருளில்

“கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப் புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின் பொதியில் தென்றல் போலாது ஈங்கு மதுரைத் தென்றல் வந்தது காணிர்” என்று பாடல் அடிகள் குறிப்பிடுகின்றன.