பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

போரிட்டு வெற்றி கொண்டது, கடல்களை எல்லைகளாகக் கொண்டுள்ள இந்த நிலம் முழுவதையும் தமிழ்நாடாக்க விரும்பி இமயத்தில் கல் எடுக்க விரும்புவது, அதுபற்றி வடதிசை மன்னர்களுக்கெல்லாம் தமிழ்நாட்டு வளம் மிக்க வில், மீன், புலி என்னும் இலச்சினைகளைக் கொண் செய்திகளை அனுப்பச் சொல்வது ஆகியவை குறித்துக் கூறுவதாக இப்பாடல் அடிகள் அமைந்துள்ளன.

இதில் தமிழ்ப்படையின் வீரம், சேரன் செங்குட்டு வனுடைய போர்த்திறன், தமிழ்நாட்டை விரிவுபடுத்த அவன் எடுக்கும் முயற்சி, தென்தமிழ்நாட்டு அரசுகளின் சின்னங்களான வில் மீன் புலி ஆகியவைபற்றிய சிறப்பான செய்திகள் வருவதைக் காண்கிறோம்.

"வில்லவன் கோதை வேந்தற்கு உரைக்கும்

நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக் கொங்கர்செங் களத்துக் கொடிவரிக் கயல்கொடி பகைப்புறத்துத் தந்தன ராயினும் ஆங்கவை திகைமுக வேழத்தின் செவியகம் புக்கன. கொங்கணர், கலிங்கர், கொடுங்கரு நாடர் பங்களர், கங்கர், பல்வேல் கட்டியர் வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டமென் கண்புலம் பிரியாது கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம் எங்கோ மகளை ஆட்டிய அந்நாள் ஆரிய மன்னர் ஈரைஞ் ஞாற்றுவர்க்கு ஒருநீ யாகிய செருவெங் கோலம் கண்விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம் இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய இதுநீ கருதினை யாயின் ஏற்பவர் முதுநீ ருலகில் முழுவதும் இல்லை இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது கடவு ளெழுதவோர் கற்கே யாதலின் வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்தமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி மண்தலை யேற்ற வரைக ஈங்கென நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா வம்பணி யானை வேந்தர் ஒற்றே"