பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 245

வ. று காப்பியம் குறிப்பிடுகிறது. இளங்கோவடிகளாரின் இந்தச் சிறப்புமிக்க காப்பிய அடிகள் தமிழ்ப்பெருமையை விரிவு l க் கூறுவதாகும்.

சேரன் செங்குட்டுவன் பெரும்படை திரட்டி வடக்கு (: .ச்ெ செல்கிறான். இப்பெரும்படை கல் எடுத்து வருவதற்காக மட்டுமல்ல, வடநாட்டு அரசன் பாலகுமரன் பக.கள் கனகனும் விஜயனும் தமிழ் அரசர்களின் ஆற்றல்களை இகழ்ந்துரைத்தனர். அவர்களுக்குத் தமது ஆற்றலைக் காட்டிப் பாடம் புகட்டுவதற்காகவும் இப் பெரும்படை செல்கிறது என்று காப்பியம் குறிப்பிடுகிறது.

".அடல்வேல் மன்னர் ஆருயிர் உண்னும்

கடலந் தானைக் காவலன் உரைக்கும் பால குமரன் மக்கள் மற்றவர் காவா நாவின் கனகனும் விசயனும் விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனக் கூற்றம் கொண்டுஇச் சேனை செல்வது" . . து காப்பியக் கவிதை அடிகளாகும்.

சேரன் செங்குட்டுவன் தனது பெரும்படையுடன் சென்று, தமிழ் மன்னர்களை இகழ்ந்த கனகவிஜயர்களையும் அவர்களோடு சேர்ந்த நூற்றுவர்களையும் சிறைப் படுத்தினான். மற்றவர்கள் பலரும் மாறுவேடம் பூண்டு தப்பி ஒடி விட்டனர்.

"வாய்வாள் ஆண்மையின் வண்தமிழ் இகழ்ந்த

காப்வேல் தடக்கைக் கனகனும் விசயனும் ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு செங்குட் டுவன்தன் சினவலைப் படுதலும்" என்று காப்பியக் கதை குறிப்பிடுகிறது.

அரசர்கள் செங்கோல் ஏந்தி நல்லாட்சி செய்தால் அல்லாது பெண்டிரின் கற்பு சிறவாது என்பது தண்டமிழ் நல்லுரை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் கண்ணகி மூவேந்தர்களுக்கும் புகழ் தந்தவள் என்பதைச் சிலப்பதிகாரம் எடுத்துக்காட்டுகிறது.