பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

"அருந்திறல் அரசர் முறைசெயி னல்லது

பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச்சிற வாதெனப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை பார்தொழு தேத்தும் பத்தினி யாகலின் ஆர்புனை சென்னி அரசர்க் களித்துச் செங்கோல் வளைய உயிர்வா ழாமை தென்புலம் காவல் மன்னவற் களித்து வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும் வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை வடதிசை மருங்கின் மன்னவர் அறியக் குடதிசை வாழும் கொற்றவர்க் களித்து" என்பது காப்பியத்தின் பாடலாகும்.

"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்" என்பது வள்ளுவர் வாசகமாகும். இதையொட்டியே இளங்கோவடிகள் தமது காப்பியத்தில்

"அருந்திறல் அரசர் முறைசெயி னல்லது

பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச்சிற வாதெனப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை" என்று கூறுகிறார் எனக் கொள்ளலாம்.

இங்கு அரசியலின் அடிப்படையும் தமிழின் சிறப்பும் குறிக்கப்படுகின்றன.

வஞ்சிக்காண்டத்தின் முடிவுரையில் இளங்கோவடிகள் சேரமன்னனின் பெருமைகளைத் தமிழ்ப் பெருமையாகக் கூறுகிறார்.

"முடியுடை வேந்தர் மூவ ருள்ளும்

குடதிசை யாளும் கொற்றம் குன்றா ஆர மார்பின் சேரர்குலத் துதித்தோர் அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் ஒடியா இன்பத் தவருறை நாட்டுக் குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும் வரியும் குரவையும் விரவிய கொள்கையின் புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய