பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 247

மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு பொங்கிரும் பரப்பில் கடல்பிறக் கோட்டிக் கங்கைப் பேர்யாற் றுக்கரை போகி செங்குட் டுவனோடு ஒருபரிசு நோக்கிக் கிடந்த வஞ்சிக் காண்டம்முற் றிற்று." இவ்வாறு சிலப்பதிகாரக் காப்பியத்தின் வஞ்சிக்காண்டம் நிறைவு பெறுகிறது.

இவ்வடிகளில் மூவேந்தருள் சேர மரபினரின் சிறப்பு, அவ்வேந்தர்களின் அறம், வீரம், ஆற்றல் முதலிய பண்புகள் அவருடைய தலைநகரின் மாண்பு, அதன் உயர்வு, அந்நகரின் சிறப்புமிக்க திருவிழாக்கள், விண்ணவர் வருகை, அந்த நாட்டுக் குடிமக்களுடைய செல்வப்பெருக்கம், உணவுப் பெருக்கம் ஆகியவற்றுடன், வரிப்பாடல், குரவைக்கூத்து, புறத்தினைக்குரிய துறைகளில் அறத்துடன் பொருந்திய போர்த்துறைகளைச் செய்து முடித்தல், வெற்றி பெறுவதில் தவறாத வாளினையுடைய பெரும்படை, கடலின் பகுதிகளையும் வெற்றி கொண்டது, கங்கையைக் கடந்து இமயம்வரை சென்று போர் செய்து வெற்றியுடன் திரும்பியது முதலிய சிறப்புகளைக்கொண்ட செங்குட்டுவ னுடைய பெருமைகளைப்பற்றியெல்லாம் கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரக் காப்பிய நூலின் முடிவில் நூலின் கட்டுரையாகத் தமிழின் பெருமையை எடுத்துக்காட்டும் பாடல் அடிகள் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன.

"குமரி வேங்கடம் குணகுட கடலா

மண்டினி மருங்கிற் றண்டமிழ் வரைப்பிற் செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியின் ஐந்திணை மருங்கின் அறம்பொருள் இன்பம் மக்கள் தேவர் எனவிரு சார்க்கும் ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர எழுத்தொடு புணர்ந்தசொல் அகத்தெழு பொருளை இழுக்கா யாப்பின் அகனும் புறனும், அவற்று வழிப்படுஉஞ் செவ்விசிறந் தோங்கிய பாடலும் எழாலும் பண்னும் பாணியும் அரங்கு விலக்கே ஆடலென் றனைத்தும் ஒருங்குடன் தழிஇய உடம்படக் கிடந்த