பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 சிலப்பதிகாரமும் திவ்யப்பரபறதமும்

வரியும் குரவையும் சேதமும் என்றிவை தெரியுறு வகையால் செந்தமி ழியற்கையில் ஆடிநன் னிழலின் நீடிருங் குன்றம் காட்டு வார்போல் கருத்துவெளிப் படுத்தும் மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதி காரம் முற்றும்" என்பது நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் முடிவுரை அடிகளாகும்.

இவ்வடிகளில் தமிழின் கூறுகளும் சிறப்புகளும் கூறப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் எல்லைகளாகத் தெற்கில் குமரித்துறை, வடக்கில் வேங்கடமலை, கிழக்கிலும் மேற்கிலும் கடல்கள் என்று கூறப்பட்டுள்ளன. இவற்றிற் கிடையிலுள்ள மண் திண்ணியமான நிலப்பகுதி. இது குளிர்ந்த இனிமையான தமிழ்மொழி வழங்குகின்ற நாடு. இந்த நிலத்தின் இருபகுதிகளாகச் செந்தமிழ், கொடுந்தமிழ் நாடுகள் என வழங்கப்படுகின்றன. இந்த நாடு ஐந்தினைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய பண் புகளைக் கொண்டிருந்தது. இங்கு வாழும் மக்கள் அறம் பொருள் இன்பம் என்னும் பயன்பாடுகளை உறுதிப் பொருள்களாகக்கொண்டு, மக்கள், தேவர் ஒழுக்கங்களுடன் வாழ்கிறார்கள்.

பயன்பாடுகளுள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருடார்த்தங்கள் பாரதநாடு முழுமைக்கும் பொதுவானவையாகும்.

பாரதி தனது விநாயகர் நான்மணி மாலைப்பாடலில், "கடமை யாவன தன்னைக் கட்டுதல், பிறர்துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், - உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல், இந்நான்கே இப்பூமியில் எவர்க்கும் கடமையெனப்படும், பயணிதில் நான்காம், அறம்பொருள், இன்பம் வீடெனு முறையே தன்னையாளும் சமர்த்தெனக் கருள்வாய் என்று கூறுகிறார். இதுவே பாரதப் பண்பாட்டுத் தளத்தின் மையமாகும்.