பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்” என்று ஆண்டாள் பாடி முடிக்கிறார். திருப்பாவை முப்பது பாடல்களைச் சங்கத்தமிழ்மாலை என்று குறிப்பிடுவது சிறப்பாகும்.

நாச்சியார் திருமொழியில் நாமமாயிரம் என்று தொடங்கும் பாடல் வரிசையில் ஒரு பாட்டில் ==

'சீதைவா யமுதம் உண்டாயப்! எங்கள்

சிற்றில்நீ சிதையேல் என்று வீதி வாய்விளை யாடும் ஆயர்

சிறுமியர் மழலைச் சொல்லை வேத வாய்த்தொழி லார்கள் வாழ்வில்லி புத்துார் மன்விட்டு சித்தன்றன் கோதை வாய்த்தமிழ் வல்ல வர்குறை

வின்றி வைகுந்தம் சேர்வரே!” என்று கோதை பாடுகிறார்.

இந்தப் பாடலில் மிக்க நேர்த்தியான அற்புதமான கருத்துமிக்க ஒப்பீடுகளை ஆண்டாள் குறிப்பிட்டுப் பாடுகிறார்.

சீதைவாயமுதம், வீதிவாய் விளையாடும் சிறுமியர் மழலைச் சொல், வேதவாய்த் தொழிலார் கூறும் வேதக் கருத்துகள் ஆகியவற்றிற்கு ஒப்பாக கோதைவாய்த் தமிழைக் குறிப்பிடுகிறார். தமிழுக்கு ஈடு சீதைவாய் அமுதமும், மழலைச் சிறுமியர் வாய்ச்சொல்லும் வேதியர் வாய் வேதமும் என்று ஆண்டாள் குறிப்பிடுகிறார்.

நாச்சியார் திருமொழி 'வாரன மாயிரம்” என்று தொடங்கும் அற்புதமான பாடல் வரிசைகளுள் ஒன்றாய்

"ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை

வேயர் புகழ்வில்லி புத்துார்க்கோன் கோதைசொல் துளய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர் வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே !” என்று கோதை பாடி மகிழ்கிறார்.