பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 255

"சிந்துரச் செம்பொடி" என்னும் பாடல் வரிசையில், "சந்தொடு காரகிலும்

சுமந்து தடங்கள் பொருது வந்திழியும் சிலம்பா

றுடை மாலிருஞ் சோலைநின்ற சுந்தரனை, சுரும்பார்

சுழற்கோதை தொகுத்துரைத்த செந்தமிழ் பத்தும்வல்லார்

திருமாலடி சேர்வார்களே !”

என்று ஒரு பாடலில் பாடுகிறார்.

குலசேகரப்பெருமான் அருளிச்செய்த பெருமாள் திருமொழியில்,

"இருளிரியச் சுடர்மணிகள்” என்று தொடங்கும் பாடல் தொகுதியில்,

"திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத்

திருவரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் கடல்விளங்கு கருமேனி யம்மான் தன்னைக்

கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால் குடைவிளங்கு விறல்தானைக் கொற்ற கொள்வாள்

கூடலர்கோன் கொடைக்குலசே கரன்சொற் செய்த நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார்

நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே!” என்று ஒரு பாடலில் குலசேகராழ்வார் பாடுகிறார்.

அவர் மேலும் "தேட்டருந்திறல்" என்னும் பாடல் தொகுதியில்,

"கொல்லிக் காவலன் கூடல் நாயகன்

கோழிக் கோன்குல சேகரன் சொல்லி னில்தமிழ் மாலை வல்லவர்

தொண்டர் தொண்டர்க ளாவரே” என்றும்,

"ஊனேறு” என்று தொடங்கும் பாடல் வரிசையில், "கொன்னவிலும் கூர்வேல் குலசேகரன் சொன்ன பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே” என்றும்,