பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

சீர்மன்னு செந்தமிழ் மாலைவல் லார்திரு

மாமகள் தன்னரு ளால்.உலகில் தேர்மன்ன ராய்ஒலி மாகடல் சூழ்செழு நீருல காண்டு திகழ்வர்களே!" என்று சீர்மன்னு செந்தமிழ் மாலை எனத் தமது பாடலைக் குறிப்பிடுகிறார்.

மூன்றாம் பத்தில், "இருந்தண்” என்று தொடங்கும் பாடல் தொகுதியின் முடிவில் -

"மூவ ராகிய ஒருவினை மூவுலகு

உண்டுஉமிழ்ந்து அளந்தானை தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண்

திருவயிந் திரபுரத்து மேவு சோதியை வேல்வல வன்கலி

கன்றி விரித்துரைத்த பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப்

பாவங்கள் பயிலாவே" என்று தமது பாடல்களைக் குறிப்பிட்டுப் பாடுகிறார்.

"வாட மருதிடை' என்று தொடங்கும் பாடல் தொகுதியின் முடிவில்,

“தேனமர் பூம்பொழில் தில்லைச் சித்திர கூட மமர்ந்த வானவர் தங்கள் பிரானை

மங்கையர் கோன்மரு வார்தம் ஊனமர் வேல்கலி கன்றி

யொண்டமிழ் ஒன்பதோ டொன்றும் தானிவை கற்றுவல் லால்மேல்

சாரகில் லாவினை தாமே !'

என்று பாடியுள்ளார். -

"ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண்” என்று தொடங்கும் பாடல் வரிசையில்

"செங்கமலத் தயன்.அனைய மறையோர் காழிச்

சீராம விண்ணகர்என் செங்கண் மாலை அங்கமலத் தடவயல்சூழ் ஆலி நாடன்

அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீபம்