பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

பதினோராம்பத்தில் “மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து" என்று தொடங்கும் பாடல் பத்தில், "பெற்றாரார் ஆயிரம் பேரானைப் பேர்பாடப்

பெற்றான் கலியன் ஒலிசெய் தமிழ்மாலை கற்றாரோ முற்றுல காள்வர் இவைகேட்க லுற்றார்க்கு உறுதுய ரில்லைஉல கத்தே" என்று பாடியுள்ளார்.

திருமங்கையாழ்வார் அருளிச்செய்துள்ள, - ,. குறுந்தாண்டகம்' என்னும் பிரபந்தப் பாசுரங்களின் நிறைவாக,

"வானவர் தங்கள் கோனும்

மலர்மிசை அயனும் நாளும் தேமலர் தூவி ஏத்தும்

சேவடிச் செங்கண் மாலை மானவேல் கலியன் சொன்ன

வண்டமிழ் மாலை நாலைந்து ஊனம தின்றி வல்லார்

ஒளிவிசும் பாள்வர் தாமே" என்று பாடியுள்ளார்.

திருநெடுந்தாண்டகப் பாசுரங்களில், "இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை

இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தா செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித்

திசைநான்கு மாய்த்திங்கள் ஞாயி றாகி அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா

அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவா தென்றும்

வாழுதியேல் வாழலாம் மடநெஞ்சமே !” என்றும், -

"மின்னுமா மழைதவழும் மேக வண்ணா

விண்ணவர்தம் பெருமானே! அருளாய் என்று அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த --

அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை