பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

“கதவு மனமென்றும் காணலா மென்றும்

குதையும் வினையாவி தீர்ந்தேன் - விதையாக நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத்தாயப் கற்றமொழி யாகிக் கலந்து” என்று உள்ளம் உணர்ந்து பாடுகிறார். நம்மாழ்வார் திருவாய்மொழி

நம்மாழ்வார் பெருமான் தமது சிறப்புமிக்க திருவாய் மொழிப் பாசுரத் தொகுதியில் பல பாசுரங்களிலும் தமிழைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழ் வேதம் என்று போற்றப்படுகிறது.

"ஏய்ந்தபெருங் கீர்த்தி யிராமா னுஜமுனிதன்

வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகிறேன் - ஆய்ந்தபெரும் சீரார் சடகோபன் செந்தமிழ்வே தம்தரிக்கும் பேராத வுள்ளம் பெற” என்று அனந்தாழ்வான் அருளிச்செய்த தனியன் சிறப்பாகக் குறிப்பிடுகிறது. சடகோபன் பாடிய பாசுரங்கள் செந்தமிழ் வேதமாகும்.

நம்மாழ்வார் தமது திருவாய்மொழிப் பாசுரங்களில், “வளவே.ழ் உலகின் முதலாய்” என்று தொடங்கும் பாடல் வரிசையில்,

“மாலே, மாயப் பெருமானே

மாமா யவனே என்றென்று

மாலே யேறி மாலருளால்

மன்னு குருகூர்ச் சடகோபன்

பாலேய் தமிழ ரிசைகாரர்

பத்தர் பரவும் ஆயிரத்தின்

பாலே பட்ட இவைபத்தும்

வல்லார்க் கில்லை பரிவதே!”

என்று பாடுகிறார்.

"கேசவன் தமர் கீழ்மேல்” என்று தொடங்கும் பாசுர வரிசையில்