பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

என்றும் புகழ்மிக்க கவிதைகளில் சீரிய கருத்துகளை இளங்கோவடிகளார் குறிப்பிட்டிருப்பது பெருமைக் குரியதாகும். இன்னும் தமிழகத்தின் இதர வளங்களையும் பெருமைகளையும் அடிகளார் கூறி மகிழ்கிறார். தென்கடல் முத்தும் தென்மலைச் சந்தும் என்றும், பொதிகையின் தமிழ் மணமும், சந்தன மணமும்பற்றியெல்லாம் பெருமைப்படத் தென்னாட்டின் வளத்தை அடிகளார் சிறப்பித்துக் கூறுகிறார்.

கோவலனும் கண்ணகியும் யாரும் அறியாதபடி அதிகாலையிலேயே புகார் நகரை விட்டு நீங்கி, காவிரியாற்றின் வடகரை வழியாக, அங்கிருந்து ஒருகாத துரத்தில் இருந்த கவுந்தியடிகளின் தவப் பள்ளியை அடைந்தனர். அங்கிருந்து மூவரும் சோலைகளும், வயல்களும் நிறைந்த காவிரிக்கரை வழியாக மேற்கு நோக்கிச் சென்று திருவரங்கத்தை அடைந்து அங்கிருந்து காவிரியைக் கடந்து தென்கரைக்குச் சென்று உறையூரை யடைந்தனர். இந்தப் பயணத்தைப்பற்றிக் கூறும்போது இளங்கோவடிகள் காவிரியின் சிறப்பைப்பற்றி விவரித்துக் கூறுகிறார்.

சனிக்கோள் புகைந்தாலும், விசும்பில் துரமகேது தோன்றினாலும், விரிவான கதிர்களைக் கொண்ட பிரகாசமான சுக்கிரன் தென்திசையில் சென்றாலும், பருவக் காற்றுத் தாக்கிக் குடகு மலையின் உச்சியில் மேகங்கள் திரண்டு குவிந்து கடும் முழக்கத்துடன் மழைவளத்தை வழங்கிக் காவிரியில் நீர்ப்பெருக்கெடுத்து வரும் காட்சியை மிக அற்புதமாக அடிகளார் விளக்குகிறார்.

இந்த மழைப்பெருக்கினால் பொங்கி வரும் காவிரிப் புது நீர் குடமலையிலிருந்து பலவேறு வளங்களை வாரிக்கொண்டு கடல் வளத்தை எதிர்கொண்டு புகார் நகரின் அருகில் செல்கிறது என்று அக்காவிரியின் வளத்தைக் குறிப்பிடுகிறார்.

" கரியவன் புகையினும், புகைக்கொடி தோன்றினும்

விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் கால்பொரு நிவப்பின் கடுங்குர லேற்றொடும் சூல்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக்