பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வளமும் உயிரின வளமும் 29

குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை”

என்று காப்பிய அடிகள் குறிக்கின்றன. இந்த அழகான பாடல் ,Grיש W וולי .

" மனியும் பொன்னும் மயில்தழைப் பீலியும்

அணியும் ஆனைவெண் கோடும் அகிலும்தன் இணையில் ஆரமும் இன்னகொண்டு ஏகலால் வணிக மாக்களை ஒத்தது.அவ் வாரியே”

என்றும்,

முல்லையைக் குறிஞ்சி யாக்கி மருதத்தை முல்லை யாக்கிப் புல்லிய நெய்தல் தன்னைப் பொருஅரு மருதம் ஆக்கி எல்லையில் பொருள்கள் எல்லாம் இடைதடு மாறும் நீரால் செல்லுறு கதியில் செல்லும் வினையெனச் சென்றது அன்றே" எனவும்,

" கல்லிடைப் பிறந்து போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்”

. .ன்றும் கம்பன் கூறிய பாடல் அடிகளை நினைவு படுத்துகிறது.

காவிரி ஆற்றின் வடகரையின் வழி நெடுகிலும் ஆம்பல், குவளை, தாமரை, தாழை, செண்பகக் காவு, மாதவிமலர், முல்லை மலர், மல்லிகை, நீலோற்பலம், பீர்க்கம்பூ, காந்தள் மலர், பச்சிலை, பித்திகை, குமிழமலர் முதலிய மலர்க் கொடிகளும் கொவ்வைக்கனி நிறைந்த கொடிகளும் வெட்டி வேர் மனமும் நிறைந்திருந்தன. மூங்கில், சந்தனம், புன்னை மயங்கள், மா, பலா, வாழை மரங்கள் நிறைந்திருந்தன. அருகம்புல், சிறுபூளைப் பூக்கள், நெல், கரும்பு வயல்கள் நிறைந்திருந்தன. வழி நெடுகிலும் பொய்கைகளும் த கங்களும் பொழில்களும், குளங்களும், இதர நீர் நிலைகளும் நிறைந்திருந்தன. ஆங்காங்கு அறப்பள்ளிகளில் அ மரங்கள் வளர்ந்தோங்கி நின்று அழகாகக்

1. யெளித்தன.