பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வளமும் உயிரின வளமும் 31

நெடுந்தொலைவு நடந்து வந்து இரவும் பகலுமாய்ப் பயணம் செய்து கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகிய r/வரும் வைகை ஆற்றின் வடகரையை அடைந்தனர். இங்கு வையை ஆற்றின் வளத்தையும் நீர்ப்பெருக்கத்தையும் அவ்வாற்றின் கரையில் நின்ற வானளாவிய உயர்ந்த பங்களைப்பற்றியும் இளங்கோவடிகள் மிகவும் சிறப்பாகக் குறிப்பிட்டுக் கூறுகிறார் :

' குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்

மரவமும் நாகமும் திலகமும் மருதமும் சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும் விரிமலர் அதிரலும் வெள்கூ தாளமும் குடசமும் வெதிரமும் கொழுங்கொடி பகன்றையும் பிடவமும் மயிலையும் பிணங்களில் மணந்த கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கனும் மிடைந்துசூழ் போகிய அகன்றேந்து அல்குல் வால்உகம் குவைஇய மலர்ப்பூந் துருத்திப் பால்புடைக் கொண்டு பன்மலர் ஒங்கி எதிரெதிர் விளங்கிய கதிர்இள வனமுலை கரைநின்று உதிர்த்த கவிரிதழ்ச் செவ்வாய் அருவி முல்லை அணிநகை யாட்டி விலங்குநிமிர்ந்து ஒழுகிய கருங்கயல் நெடுங்கண், விரைமலர் நீங்கா அவிரறல் கூந்தல் உலகுபுரந் துாட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப் புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி வையை யென்ற பொய்யாக் குலக்கொடி" என்று, மிக்க அழகிய காப்பிய அடிகளில் மிகச் சிறப்பாக

அடி களர் குறிப்பிடுகிறார். -

வையை ஆற்றின் கரையின் வெளிப்பகுதியெங்கும் குரா பங்களும், மகிழ மரங்களும், கோங்கு, வேங்கை, வெண்கடம்பு மரங்களும், சுரபுன்னை, மஞ்சாடி, மருத பங்களும், உச்சிச் செலுந்தின் மரங்களும், செருந்தி பங்களும் மற்றும் சண்பக மரம் முதலியவைகளெல்லாம் பிெ மயங்களுடன் சேர்ந்து மலர்ந்து அந்த வையை