பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

என்னும் நீங்கைமீது உடுத்தப்பட்ட பூந்துகிலைப் போல விளங்கியது.

அவ்வாற்றங்கரையின் உட்பகுதியெல்லாம், குருக்கத்தியும் செம்முல்லையும் வளைந்து நெளிந்த கொடிகளையுடைய முசுட்டையும், மலர்ந்து விரிந்த மலர்கள் நிறைந்த மோசி மல்லிகையும், வெள்ளை நறுந்தாளியும், வெட்பாலையும், மூங்கிலும், இவற்றில் படர்ந்த பெருங்கை ஆலும், குட்டிப்பிடவமும், இருவாட்சியுமாகிய பல வகை மலர்களும் விரிந்து பூங்கொடிகள் பின்னிப் படர்ந்து கிடப்பனவற்றைத் தன்னைச் சுற்றிச் சூழ்ந்த கோவையாகிய மேகலையாகவும் உடைய, வளைந்த கரையாகிய அல்குலையும், அகற்சியையும் பொலிவையும் உடைய இடைக்குறையிலே, பக்கங்களிலே பருமனாகக்கொண்டு தம்மீது பல வேறு மலர்களை உதிர்தலாகப் பெற்று உயர்ந்து குவிந்துள்ள, ஒன்றுக்கொன்று எதிர் எதிராக நின்று திகழும் மணல் குன்றுகளாகிய ஒளியும் இளமையும் உடைய அழகிய முலைகளையும், முருக்க மரங்கள் கரையினின்று உதிர்த்த இதழாகிய சிவந்த வாயினையும், அருவி நீரோடும் இடையறாது வருகின் ற முல்லையரும்பாகிய எயிற்றினையும் உடையவளும், குறுக்கே மறித்தும் நெடுகிலும் ஒடியும் திரிகின்ற மீன்களாகிய நெடிய கண்களையும், மனம் மிக்க மலர்கள் ஒரு பொழுதும் நீங்குதல் இல்லாது விளங்குகின்ற அறலாகிய கூந்தலையும் உடைய, உலகத்தே வாழுகின்ற பல வேறு உயிரினங்களையும், பேணி ஊட்டி வளர்க்கின்ற அருங்குனங்களையும், அறவொழுக்கத்தையும், அவ் வொழுக்கங் காரணமாகப் புலவர் பலரும் புகழுமாறு அவர்களுடைய செந்நாவிலே பொருந்தியுள்ள பூங்கொடி போல்பவளான வையை, வையை என்று உலகத்தாரால் சிறப்பித்துக் கூறப்படுகின்ற பெயருடையவளாகிய தனதொழுக்கம் ஒரு காலத்தும் பொய்யாதவளும், பாண்டியர் குலத்துப் பெண்ணாயிருப்பவளுமாகிய அந்த அழகிய நங்கையானவள்” என்று இந்தச் சிலப்பதிகாரக் காப்பிய அடிகளுக்கு உரையாசிரியர்கள் பொருள் கூறுவர்.