பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 61

கற்கள் இட்டு வைக்கப்பட்டுள்ள கூடைகளும், துரண்டில் வடி வாக அமைக்கப்பட்ட கருவிகளும், கட்டு வைத்து அகழியை நீந்தி வந்து மதிலைப் பற்றுவாரைக் கோத்திழுக்கும் கருவிகளும், கழுக்கோல் போலக் கழுத்திற்பூட்டி முறுக்கும் சங்கிலியும், ஆண்டலைப்பறவை வடிவாகப் பண்ணிப் பறக்கவிடப் பகைவர் தலை உச்சியில் கொத்தி மூளையைக் குடி க்கும் பொறிகளும், அகழியினின்றும் ஏறினால் அவர் களைக் கீழே தள்ளிவிடும் இரும்பால் ஆன கவைக்கம்புகளும், கழுக்கோல்களும், அம்புக்கட்டுகளும், அம்பேவும் அறைகளும், பற்றாக்கைகள் (பற்றுக்குறடுகள் போல உள்ள கருவிகள்), தூக்கிப் போடும் விட்டங்களும் பதிவினைப் பற்றுவாரின் கைகளைத் துளைக்கும் ஊசிப் பொறிகளும், பகைவர்மேல் பாய்ந்து கண்ணைக் கொத்தும் ன்ே கொத்தி போன்ற கிச்சிலிப் பொறிகளும், மதில் உச்சியில் 41 வினோர் உடல்களைக் கொம்பால் கிழிக்க இரும்பால் செய்து வைத்த பன்றிப் பொறிகளும், பகைவரை அடித்தற்கு r/வங்கில் வடிவாகப் பண்ணிவைத்த பொறிகளும், கதவுக்கு வலிமையைக் கொடுக்கும் உள்வாசல் படியில் நிலத்திலே விழும்படி விடும் மரங்களும், கணைய மரமும், மிகோல்களும், குந்தமும், ஈட்டிகளும், குருவித்தலைப் பொறிகளும் மற்றும் சதக்கென வெட்டித் தள்ளிவிடும் களிற்றுப்பொறி, பாம்புப்பொறி, கழுகுப்பொறி, புவிப்பொறி, கு, ப்பாம்பு சகடப்பொறி, தகர்ப்பொறி முதலிய பல வகைப் பொறிகளும் கொண்ட பாதுகாப்பு நிலைகள் நிறைந்த, கொடி கள் அசையும் கோட்டைச் சுவர்களைக் கொண்ட மதுரை மாநகரம் என்று இளங்கோவடிகள் சிறப்பித்துக் க. பகிறார்.

" மிளையும் கிடங்கும் வளைவில் பொறியும்

கருவிரல் ஊகமும் கல்லுமிழ் கவனும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் காப்பொன் உலையும் கல்லிடு கூடையும் தாண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும் சென்று எறி சிரலும் பன்றியும் பனையும்