பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 65

.ெ ப்ய வேண்டிய கை, கால், முகம் அலம்புதல் முதலிய க. பன்களைச் செய்து முடித்து உணவு அருந்த முற்படுவதாகக் குறிப்பிடுகிறார்.

" கோளிப் பாகல் கொழுங்கனித் திரள்காய்

வாள்வரிக் கொடுங்காப் மாதுளம் பசுங்காய் மாவின் கனியொடு வாழைத் தீங்கனி சாலி யரிசி தம்பால் பயனொடு கோல்வளை மாதே கொள்கென"

என்று ஆயர்குல மகளிர் கண்ணகியிடம் புதுப்பானைகளும் 1. ப்கறி கனிகளும் அரிசியும் கொடுத்தனர். கண்ணகி அவைகளைச் சீராகச் சமைத்தாள். உணவு தயாரித்துப் பரிமாறினாள். இதைப்பற்றிக் கூறுமிடத்து இளங்கோ வ, கள், அரசர்க்கு அடுத்த குலத்தவர் வணிகர். அவர்கள் வேதமுறைகளை அனுசரித்துக் கடன்களைச் செய்து உணவு

.ண்னை முற்பட்டதாகக் கூறுகிறார்.

" அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின்

உரிய எல்லாம் ஒருமுறை கழித்தாங்கு” . .ன்று குறிப்பிடுகிறார்.

கோப்பெரும் தேவியைச் சூழ்ந்து பணிப்பெண்கள் வருவதைக் குறிக்கும்போது, அவர்களுள் சிலர் கண்ணாடி யந்தி வந்தனர். சிலர் அணிகளை ஏந்தியும், சிலர் அழகிய கலன்களை ஏந்தியும், சிலர் நூலாடைகளையும் பட்டாடை களையும் ஏந்தியும், சிலர் வெற்றிலைச் செம்பினை ஏந்தியும், பெலர் வண்ணமும் சுண்ணமும் கத்துரியும் கலந்த சந்தனக் குழம்பும் ஏந்தியும், சிலர் தொடையல் மாலை, பிணையல், கவரி, துபம் ஆகியவை ஏந்தியும், பலர் வாழ்த்துப் பாடியும் வந்தனர் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்கள். இவையெல்லாம் அன்று தமிழகமும் பாண்டிய நாடும் அ ைந்திருந்த நாகரிக வளர்ச்சியையும் மனித மேம்படுகளையும் எடுத்துக் காட்டுகின்றன. மலைநாடுபற்றி

மலை வளத்தையும் மலைவாழ் மக்களின் செயல்பாடுகள் பற்றியும் அடிகளார் மிகவும் அழகாகக்