பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

திருமங்கையாழ்வாரின் பாசுரக் குறிப்புகளை மேலும்

காணலாம். ■ *

“ எண்ணில்மிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு

மறையும் ஏழிசையும் வேள்விகளும் இயன்றபெருங்

குணத்தோர் மண்ணில்மிகு மறையவர்கள் மலிவெய்தும்

நாங்கூர்”

என்று பாடுகிறார். இன்னும். திருநாங்கூரை மையமாக வைத்துத் தமிழகத்தின் செழிப்பையும் செல்வமிகுதியையும், வளத்தையும், வண்ண மாடங்களையும் இசை மற்றும் ஆடல் பாடல்களையும் குறித்து மிக விரிவாக நெஞ்சுருகப் பாடுகிறார். - - --

" உண்மைமிகு மறையொடுநற் கலைகள்நிறை பொறைகள்

உதவுகொடை யென்றிவற்றின் ஒழிவில்லாப் பெரிய

வண்மைமிகு மறையவர்கள் மலிவெய்தும் நாங்கூர்”

என்றும்,

" மாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி

மதுவெள்ளம் ஒழுகவய லுழவர்மடை யடைப்ப மாறாத பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்

என்றும்,

" திருமடந்தை, மண்மடந்தை யிருபாலும் திகழத்

தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும் அருள்நடந்துஇவ் வேழுலகத் தவர்பணிய வானோர்

அமர்ந்தேத்த இருந்தவிடம் பெரும்புகழ்வே தியர்வாழ்

என்றும், -

" என்றுமிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையோர்

ஏழிசையும் கேள்விகளும் இயன்றபெருங் குணத்தோர் அன்றுலகம் படைத்தவனே யனையவர்கள் நாங்கூர்” என்றெல்லாம் ஆழ்வார் பாடுகிறார். இப்பாடல்களில் மனித முயற்சிகள் பாராட்டப்படுவதையும், வாழ்க்கை மேம்பாடுகள் வலியுறுத்தப்படுவதையும், ஆழ்வார்களின் உயர்ந்த மனிதாபிமானத்தையும் காணலாம்.