பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

சிறப்புடை மறையோர், திடமொழி மறையோர், திசைமுகன் அனையோர், செல்வ நான்மறையோர், செஞ்சொல் நான்மறையோர், தென்திசைத் திலதம் அனையவர் தெளிந்த நான்மறையோர் என்றெல்லாம் பெருமைப்படுத்திப் பாடுகிறார். அதன் மூலம் அந்தப் பகுதி கல்வியும் செல்வமும் இணைந்து சிறப்பாக இருப்பது காணப்படுகிறது.

நாங்கூர் வட்டாரம் சோழ நாட்டின் புகார் நகரப் பகுதியைச் சேர்ந்த செழிப்புமிக்க தாங்கா விளையுள் நல்நாடு என்று சிலப்பதிகாரச் செய்யுள் குறிப்பிடும்படியாக மிக்க விளைவு ள்ள நாடாகும். மறைநூல் அறிவின் மிக்க, வல்லவனான மறையோன் பராசரனும் அப்பகுதியைக் சேர்ந்தவனேயாகும்.

திருவெள்ளியங்குடியைப்பற்றி அதன் வளம், செழுமை, நீர்வளம், மண்வளம், நெல், மணி, வாழை மற்றும் இதர கனிகள், கரும்பு ஆகியவைகளின் பெருக்கம், மக்களின் நல்வாழ்வு மகிழ்ச்சி இசை நாடகம் முதலியவற்றின் சிறப்புகளைப்பற்றி விரிவாகப் பாடுகிறார்.

இன்னும் திருப்புள்ளம் பூதங்குடி, திருப்பேர் நகர், திருநறையூர், திருச்சேறை, திருவழுந்துார், திருக்கண்ணங்குடி, திருவல்லவாழ் மற்றும் திருக்கோட்டியூர் முதலிய பல திவ்ய தேசங்களின் சிறப்பு, செழிப்பு, கல்வி, செல்வம், மறையோர் களின் சீரான பணி முதலியவைகளைப்பற்றியெல்லாம் திருமங்கையாழ்வார் சிறப்பாகப் பாடுகிறார். நம்மாழ்வார்

நம்மாழ்வார் தனிச்சிறப்புமிக்க ஆழ்வாராவார். அவர் ஆழ்வாராகவும் ஆச்சாரியாராகவும் வைணவர்களால் போற்றப்படுகிறார். நம்மாழ்வார் பாடியுள்ள திருவாய் மொழிப்பாசுரங்கள் வேதங்களின் சாரமாகும். அவருடைய பாசுரங்கள் மிக உயர்ந்த தத்துவஞானக் கருத்துகளைக் கொண்டனவாகும். அவைகளில் இப்பேருலகில் உள்ள ஆத்மாக்கள் அனைத்தும் கண்னனே, கண்ணன் வடிவமே என்னும் கருத்தை மிகச்சிறந்த பாடல் அடிகளில் ஆழ்வார் குறிப்பிடுகிறார். "புகழும்நல் ஒருவன் என்கோ” என்று