பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் கண்ணகியின் க ற் ைப த் தாம் புகழ்வதுடன் நிற்காமல் தாம் படைத்த பாத்திரங்களில் முக்கியமானவர்கள் எல்லோரும் புகழுமாறும் செய்துள்ளார். கவுந்தியடிகள், கற்புக்கடம் பூண்ட இத்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால் ' என்றும், வேட்டுவகுலத் தேவராட்டியான சாலினி, தென்தமிழ்ப்பாவை செய்த தவக்கொழுந்து, ஒருமா மணியா யுலகிற் கோங்கிய திருமா மணி : என்றும், செங்குட்டுவனும் அவருடைய தேவியும், மாபெரும் பத்தினிக் கடவுள் என்றும், கண்ணகியின் அடித்தோழி, கற்புக் கடம்பூண்டு காதலன் பின்போக்த பொற்ருெடி நங்கை என்றும் மதுரை மாநகர மக்கள் வம்பல் பெருந் தெய்வம் ” என்றும் புகழ்கின்றனர். இவ்வாறு எல்லோரும் கண்ணகியைக் கற்புக்கு எடுத்துக்காட்டு என்று கூறுவதன் பொருள் யாது ? கற்பின் இலக்கணத்துக்கு ஒத்து நடப்பது பெரும்பாலும் கடினமாயினும் க ண் ண கி அணுவளவும் பிறழாமல் நடந்தாள் என்பதேயாகும். அதனுல் கற்பின் இலக்கணம் யாது ? அதற்கேற்பக் கண்ணகி எவ்வாறு நடந்தாள் ? என்பதை ஆராய விரும்புகின்றேன். தமிழ்மொழியில் தலைசிறந்த இலக்கணமாயுள்ளது தொல்காப்பியம். தலைசிறந்த அறநூலாகவுள்ளது திருக்குறள். இந்த இரண்டு நூ ல் க ளு ம் இளங்கோவடிகள் காலத்தில் பெருவழக்கில் இருந்தன. இளங்கோவடிகளும் அவற்றைத் தழுவியே காவியம் செய்துள்ளார்.