பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 53 அதுவே காந்தியடிகளைத் துறவியாக்கியது. அதிலுள்ள கருத்தையே காந்தியடிகள் சர்வோதயம் ' என்று கூறினர். அத்தகைய நூலில் அதன் ஆசிரியர் பெருந்தகை சான்ருேர் உள்ள நாடே சிறந்த நாடு என்று கூறுகின்ருர், இந்தக் கருத்து தமிழ்நாட்டு மக்களுக்குப் புதியதன்று. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே ஒளவைப்பிராட்டியார் ஒரு நாட்டின் சிறப்பு அதிலுள்ள நிலத்தின் செழுமையைப் பொறுத்ததன்று, மக்களின் ஒழுக்கத்தையே பொறுத்தது. நாடா கொன்ருே காடா கொன்ருே அவலா கொன்ருே மிசையா கொன்ருே எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லே, வாழிய கிலனே (புறம்-187) என்று மிகத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார். செல்வத்தைக்கொண்டு சிறப்பைக் கணிப்பது தவறு என்பதற்கு இத்துணையும் கூறியுதுகூடத் தேவையில்லே. திருவள்ளுவர் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள என்று ஐந்து சொற்களில் எச்சரிக்கை செய்துள்ளதே போதும். 2. இனிப் பேராசிரியர் அக்காலத்து மக்கள் எல்லாவித நாகரிகத்துறைகளிலும் சிறந்திருந்தார்கள் என்று கூறு கின்ருர், நாகரீகம் என்பது யாது ? ஆதியில் மனிதன் காட்டிலேயே வசித்தான். இயற்கைச் சக்திகளுக்கு ஆளாயிருந்தான். அவனுக்குப் பயிர் செய்யத் தெரியாது. அதல்ை காய்கனிகள் முதலியவற். றையும் கையில் அகப்பட்ட சிறு பிராணிகளையுமே உணவாக உண்டான். அவனுக்கு ஆடை நெசவு செய்யத் தெரியாது, அதல்ை ஆடையின்றியே அலைந்து திரிந்தான். வீடு கட்டத் தெரியாது அதனுல் வெயிலுக்கும் மழைக்கும் மரங்களின் அடியிலேயே தங்கின்ை.