பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சிலப்பதிகாரம் விரைதல்போல் காம இன்பங்களே எல்லாம் அவசரம் அவசர மாக அனுபவித்தார்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த மக்கள் செல்வத்தில் தி8ளத்தார்கள் என்பது உண்மைதான். ஆனல் அச் செல். வத்தை எல்லாம் காமத்தில் ஆழ்வதற்கே பயன்படுத்தி. ர்ைகள். அவர்கள் இழிந்த ஒழுக்கமுடையவர்களாயிருந் தார்கள் என்பதற்குச் சில சான்றுகள் தருகின்றேன். மாதவி பன்னிராண்டு நிரம்பிய காலத்தில் ஆடல் பாடல் அழகு மூன்றிலும் நிறைந்தவளாயிருந்தாள். 5 ||(قليY_1 = இருடைய தாய் சித்திராவதி அவளுடைய ஆடலையும் பாடலை யும் சோழன் கரிகாற்பெருவளத்தானுக்குக் காட்ட விரும்பி. ள்ை. அதன்மேல் அரசனுடைய அவையிலுள்ள அரங்கத். தில் மாதவியின் நடன அறங்கேற்றம் நடைபெற்றது. அக்காலத்தில் நடனத்தில் மிகுந்த திறமையுடையவ. ளுக்கு அரசன் தலைக்கோலி என்ற பட்டம் அளித்து, அதற்கு அடையாளமாகத் தலைக்கோல் என்ற கோலேத் தருவான். அரசன் பகையரசரை வென்று அவரிடமிருந்து கவர்ந்து கொள்ளும் அவர்களுடைய வெண் கொற்றக் குடையின் காம்பைக்கொண்டே பெரும்பாலும் தலைக்கோஜலச் செய்வர். அக்காம்பை சாம்பூநதம் என்னும் தலைசிறந்த பொன் தகட்டைக் கொண்டு பொதிந்து இடையிடையே நவமணி களே இழைத்து அரண்மனையில் வைத்திருப்பர். அரங்கேற்றம் நடத்தும் நாளில் அதனை அரங்கில் வைத்து புண்ணிய தீர்த்தத்தைப் பொற்குடத்தில் கொண்டு வந்து நீராட்டுவர். அதன்பின் அதற்கு மாலை சூட்டி அரச னுடைய பட்டத்து யானையின் கையில் வாழ்த்தித் தருவர். அதன்பின் முரசெழுத் தியம்பப் பல்லிய மார்ப்ப அரை சொடு பட்ட ஐம்பெருங் குழுவும் தேர்வலம் சென்று கவிகைக் கொடுப்ப ஊர்வலம் சென்று புகுந்து முன் வைப்பர்