பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 63 இந்திரவிழவூரெடுத்த காதையின் இறுதி 50 வரிகளுக்கு உரை எழுதப் புகும்போது அடியார்க்குநல்லாச் இனி வீதி வருணனை கூறுவர் என்று தொடங்குகின்றர். சாதாரண மாக விதி வருணனை என்றவுடன் வீதியின் அமைப்பு, விதியின் இருமருங்கிலுமுள்ள வீடுகளின் அலங்காரங்கள் முதலியவற்றைக் கூறுவர் என்று நினைப்போம். வகைபெற எழுந்து வானம் மூழ்கிச் சில காற்று இசைக்கும் பல்புழை கல்லில் ஆறுகிடக் தென்ன அகனெடுக் தெரு (மதுரை 357-9) அதாவது வானளாவி நின்று தென்றற் காற்று தவழும் சன்னல்காேயுடைய நல்ல வீடுகள் இருமருங்கிலுமுள்ள ஆறுகிடந்தாற்போன்று அகன்றும் நீண்டும் உள்ள தெரு என்று மாங்குடிமருகனுர் கூறுவதுபோல் கூறுவர் என்று எண்ணுவோம். i ஆணுல் இளங்கோவடிகள் அப்படி எதுவும் கூறவில்லை. அவர் விதிகளில் நடந்த ஒரு நிகழ்ச்சியைமட்டுமே கூறுகின் ருர். அக்காலத்தில் வீதிகளில் நிகழும் காட்சிகளில் அதுவே மிக முக்கியமானது. சிறந்தது என்று க ரு தி .ே ய காதையின் இறுதியில் முத்தாய்ப்புப்போல் கூறுகின்ருர் என்று தோன்றுகிறது. ஆளுல் அதனைக் கண்ணுறும் எந்தத் தமிழனும் வெட்கித் தலைகுனியாமல் இருக்க முடியாது. அவ்வாறு கவிஞர் முக்கியமானதாகக் கருதியதும் தமிழர் தலகுணியக் கூடியதுமான அந்த நிகழ்ச்சி யாது ? விதியில் காமன்சேனையாகிய கடைகழிமகளிர் வருகின்றனர். அவர்களைக் காணும் கல்லா இளைஞர் அவர்கள்மீது ஆசை கொள்கின்றனர். மகளிர் மறுக்கவே இளைஞர் காதற் கவிதைகளைப் பொழிகின்றனர்: அங்கண் வானத்து உலவும் அணிநிலா அரவு விழுங்கிவிடும் என்று அஞ்சிக் கருமுகிலாகிய கூந்தலுடன் கயல்மீன்களாகிய கண்களுடன் குமிழ் மலராகிய மூக்குடனும்