பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 67 பெண்கள் பரத்தையரே யாயினும் மார்பை மூடாமல் வந்திருக்கமாட்டார்கள் எ ன் று முன்னமே கண்டோம். மூடாமல் வந்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும் மைந்தருடைய மார்பில் மட்டும் படுவானேன் ? தோள் முதலியவற்றில் படாவோ ? மைந்தர் மார்பால் தள்ளுவா. னேன்? அதுபோகட்டும், கூட்ட நெருக்கடியில் போகும்போது இளைஞர் காதற் கவிதைகள் மொழிந்ததேன் ? புலவியாலே கூடாத மகளிரை இங்ங்னம் புகழ்ந்து புலவியைத் தீர்த். தனர் என்று அடியார்க்குநல்லாரே கூறுகின்றனரே, அதை மறப்பது எப்படி? இனி மதுரைமா நகரத்தில் வாழ்ந்த மக்கள் எத்தகைய வாழ்க்கை நடத்தினர் என்று பார்ப்போம். கவுந்தியடிகளும் கோவலனும் கண்ணகியும் ஒருநாட் காலையில் மதுரை நகரத்தில் புறஞ்சேரியில் வந்து தங்கினர். மறுநாட் கா8ல. யில் கோவலன் கவுந்தியடிகளிடம் தான் மதுரை நகர்க்குச் சென்று தன்னினத்தவரைக் கண்டு, தங்க வீடு அமர்த்திக் கொண்டு வருவதாகச்சொல்லி விடைபெற்றுக்கொண்டு மதுரை நகருட் புகுந்தான். - புகுந்தவன் கால முதல் மாலே வரை நகரம் முழுவதும் சுற்றினன். அவன் பால்வேறு தெரிந்த கால்வேறு தெருவும் அந்தியும் சதுக்கமும் ஆவணவிதியும் மன்றமும் கவலேயும் மறுகும் திரிந்தான் அந்தி என்பது முச்சந்தி. சதுக்கம் என்பது நாற்சந்தி. கவலை என்பது பலவாய் ஒன்ருன முடுக்கு, மறுகு என்பது குறுந்தெரு, ஆகவே மூலைமுடுக்குகளைக்கூடப் பார்க்காமல் விட்டுவைக்கவில்லை. ஆயினும் இளங்கோவடிகள் அவன் பார்த்தவற்றுள் இரண்டு இடங்களையே வர்ணிக்கின்ருர். அயலார் வந்தால் ஆவலுடன் பார்க்கக்கூடிய இடங்கள் பல விருக்கவே