பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சிலப்பதிகாரம் செய்தன. அவற்றுள் முக்கியமானவை அந்தனர் பள்ளிகள், பெளத்தருடைய கோயில்கள், சமணருடைய கோயில்கள், அறங்கூறவையம், பட்டி மண்டபம், சோறிடுஞ் சாலேகள், காட்டு விலங்குச்சாலை என மாங்குடி மருதர்ை தமது மதுரைக்காஞ்சியில் கூறுகின்ருர். எல்லாத் தெருக்களிலும் அலேந்துதிரிந்த கோவலன் இவைகளையும் பார்த்தேயிருப்பான். ஆல்ை இளங்கோவடிகள் இவற்றைப்பற்றி ஒரு சொற்கூடக் கூறவில்லை. அவற்றைப் பார்த்தான் என்று கூடக் குறிப்பிடவில்லை. இவைகளைத் தவிர்த்து வேறு இரண்டு இடங்களைப்பற்றி மட்டுமே விரிவாகக் கூறுகின்ருர் அவை எவை? அதற்குக் காரணம் என்ன ? அவர் வர்ணிக்கும் இரண்டு இடங்கள் பரத்தையர் வாழும் வீதிகளும் பண்டங்கள் விற்கும் வீதிகளுமாகும். இந்த இரண்டு வகை வீதிகளைப்பற்றி மட்டும் இளங்கோவடிகள் விரிவாகக் கூறுவதால், இவையே அந்நகரத்தில் வாழ்ந்த மக்களின் க ரு த் தி ல் சிறப்புடையன என்று தோன்றுகின்றது. அவர்கள் கவுந்தியடிகள் கூறுவதுபோல் பெண்டிரும் உண்டியும் இன்பம் என்றுலகில் கொண்டோர் ’, உண்டி என்பதில் சுகபோகங்களுக்கு வேண்டிய சகல பொருள்களும் அடங்கும், கவுந்தியடிகள் உண்டியும் பெண்டிரும் என்று கூருமல் பெண்டிரும் உண்டியும் என்று கூறியதால் அக்காலத்து மக்கள் உண்டியின் பத்திலும் பெண்டிரின் பத். தையே பெரிதாக மதித்தவர் என்று தோன்றுகிறது. இக்கருத்து பற்றியே இளங்கோவடிகள் பரத்தையர் வீதிகளே வர்ணித்த பின்னரே கடைத்தெருக்களை வர்ணிக்கின்ருர். அதுமட்டுமன்று, ஐம்பது வரிகளில் கடைத் தெருக்களை வர்ணிப்பவர், காமுகர் வீதிகளை வர்ணிக்க நூறு வரிகளைப் பயன்படுத்துகின்றனர். அதுவே ஊரில் பார்க்கவேண்டிய தலையாய இடம்போலும் ! காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த இந்திர விழாவை வர்ணிக்கும்போது இறுதியில் கூறியதற்குப் பொருள்கூறத்