பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 81 - - -

பூவிலே என்னும் சொற்ருெடர் சிலப்பதிகாரத்தில் (சிலப். 5-51) வருகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தவர்களைக் கூறும்போது இளங்கோடிகள் பூவிலை மடந்தையர் என்பவரையும் குறிப்பிடுகின் ருர். அதற்கு அரும்பதவுரையாசிரியர் * பரிசங்கொள்வார் . என்றும், அடியார்க்குநல்லார் அற்றைப் பரிசங்கொள்வார் என்றும் பொருள் கூறுகின்றனர். இந்தப் பொருளே சரியானது என்பது மணிமேகலையிலிருந்தும் அறியலாம். மாதவியின் தாயான சித்திராபதி கோவலன் இறந்துவிட்டான் என்று மாதவி துறவுபூண்டாள் என்பதை பூவிலே ஈத்தவன் பொன்றினன் என்று மாதவி மாதவர் பள்ளி அடைந்தனள் என்னும் சொற்களில் கூறுகின்ருள். பூவிலே ஈத்தவன் என்பதற்கு இக்காலத்துப் புலவர் கூறும் பொருள் அணுவளவும் பொருந்தாது என்பது தெளிவு. பண்டைக்காலத்தில் அரசர்கள் பரிசிலர்க்குப் பொன்ல்ை தாமரைப் பூப்போல் செய்து கொடுப்பது வழக்கம். ஆளுல் அவர்கள் பாணர்களுக்கே பொற்பூ கொடுப்பார்கள். விறலியர்க்கன்று. புறநாநூறு (11, 364), பொருநராற்றுப்படை (481-2), மலைபடுகடாம் (569-70), மதுரைக்காஞ்சி (218). பதிற்றுப்பத்து (12:23; 49; 1) முதலிய நூல்கள் எல்லாம் பாணர்க்குப் பொற்பூவும், விறலியர்க்குக் கழுத்தில் அணிய மாலை, கையிலனியத் தொடிபோன்ற அணிகலன்களுமே தந்ததாகக் கூறுகின்றன. எந்த நூலினும் அரசர்கள் விறலியர்க்குப் பூ தந்ததாகக் கூறப்படவில்லை. ஆகவே இக்காலத்துப் புலவர் பூவிலே என்பதற்கு வேறு பொருள் கூற முனைவதில் பயனில்லை. உள்ளதை உள்ளபடி உரைப்பதே உண்மைத் தெய்வம் வேண்டுவதாகும். பிழையைப் பிழை என்று கூறுவதே பிழை செய்யாமல் பாதுகாப்பதற்குரிய வழியாகும். அறிஞர்கள் புண் வைத்து மூடார் பொதிந்து.