பக்கம்:சிலம்பின் கதை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழக்குரை காதை

125



கற்றைக் குழலாள் ஒருத்தி இழந்து வாசற் கடையில் நின்று கதறுகின்றாள் என்று அறிவிப்பாய்” என்று ஆணையிட்டாள்.

அவன் உள்ளே சென்று வாழ்த்துக் கூறி அரசனிடம் வந்தவளைப்பற்றி அடித்து விழுந்து கொண்டு அலறிய வண்ணம் தெரிவித்தான். “கணவனை இழந்தவள் வாயிற் கடையில் வந்து நிற்கிறாள்; அச்சம் தரும் வடிவில் அவள் காணப்படுகிறாள். தாருகனின் மார்பைக் கிழித்த பேர்உரம் படைத்த காளிபோலக் காட்சி தருகிறாள். ஆவேசம் கொண்டவளாக இருக்கிறாள்” என்று அறிவித்தான்.

வழக்கு உரைத்தல்

“அவளை உள்ளே வரவிடுக” என்று அரசன் கூற வாயிற்காவலன் அவளை அழைத்துச் சென்று உள்ளே வர விட்டான். மன்னவனைக் கண்டாள்; அவன் இவள் கண் ணfரைக் கண்டு கருத்து அறிய விழைந்தான். “இள நங்கையே நீ யார்?” கண்ணிரோடு கலங்குவது ஏன்?” என்று வினவினான். அவள் அதிர்ந்திடும் மொழியில் தான் யார் என்பதையும், தன் வழக்கு யாது என்பதையும் அடுக்கி வைத்துக் கூறினாள்.

“ஆராயாது தீர்ப்புக் கூறிய அரசன் நீ சோழ நாட்டு மகள் நான் ; புறாவிற்காகத் தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச் சோழன் ஆண்ட நாடு என்னுடைய நாடு; ஆவின் கண்ணிர் தன் நெஞ்சு சுட்டது. மணியின் நா அவனைத் தட்டி எழுப்பியது. தன் ஒரே மகனைத் தெருவில் கிடத்தித் தேர் கொண்டு உயிர் போக்கிய உயர்ந்தோன் மனுநீதிச் சோழன்; இவர்கள் ஆண்ட நாடு சோழ நாடு: புகார்நகரம் எமது ஊர்”.

“புகார் நகரில் மாசாத்துவான் என்னும் வணிகன் மகன் ஆகிய கோவலன் வாழ்க்கையைத் தேடி ஊழ்வினை துரப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/126&oldid=936443" இலிருந்து மீள்விக்கப்பட்டது