பக்கம்:சிலம்பின் கதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

சிலம்பின் கதை



நறுமணம் பூசி அவர்கள் கவர்ச்சியோடு விளங்கினர். பாட்டும் உரையும் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தன.

தட்டுகளில் பூக்களையும், சுண்ணத்தையும், அணி வகைகளையும் தாங்கிச் சென்றனர். பூரண பொற்குடம் ஏந்தினர். ஒளிவிளக்கு ஏந்தினர். வண்ணம் ஏந்தினர். சுண்ணம் ஏந்தினர். பாலிகைக் குடம் தாங்கினர். எங்கும் மங்கலக் காட்சியைத் தங்க வைத்தனர்.

கூந்தலில் பூக்கள் சூடிய மங்கல மடந்தையர் ஆசி கூறினர். “இருவரும் இணை பிரியாமல் வாழ்க” என்று வாழ்த்துக் கூறி அவர்கள் மீது மலர்களைத் தூவி நல்லமளியில் சேர்த்தனர்.

"அரசன் வாழ்க! அவன் ஆட்சி சிறக்க!” என்று வாழ்த்துக் கூறி அம் மணவிழா நிகழ்வினை முடித்தனர்.


2. இல்லற வாழ்க்கை
(மனையறம்படுத்த காதை)

கண்ணகியும் கோவலனும்

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”

என்பார் வள்ளுவர். அவர்கள் அன்பு வாழ்க்கை இன்பத்தில் தொடங்கியது. காதலில் களித்துக் கவிதைபாடி அவன் சிறந்த காதலன் என்பதை வெளிப் படுத்தினான். முன்பின் பழகாதவர்கள்; காதலித்து மணம் செய்து கொண்டவர்கள் அல்லர், மணம் செய்து கொண்டு காதலித்தவர்கள்.

அவர்களை இன்ப இரவுகள் இணைத்தன. அவன் “முதல் இரவு” என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சி என்றுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/13&oldid=958903" இலிருந்து மீள்விக்கப்பட்டது