பக்கம்:சிலம்பின் கதை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

சிலம்பின் கதை



அவள் பேரழகில் மயங்கிக் கிடந்தனர். அவளைக் கலை உலகில் காண நாடே எதிர்பார்த்து நின்றது. சித்திராபதி அவளை மேடையில் ஆடவைக்க விரும்பினாள். இந்திர விழாவில் கற்றுத் துறை போகிய அந்நங்கை வந்து ஆடுவாள் என்று எதிர்பார்த்தனர்; நாட்டிய ஆசான் காத்துக் கிடந்தான். மணிமேகல்ையின் அடுத்த நிலை யாது? அவள் கோட்பாடு யாது? என்று சித்திராபதி தொடுத்த வினாவுக்கு அவள் தந்த விடை யாருமே எதிர் பார்க்கவில்லை. தன்மகளை “வருக” என்று அழைத்தாள். 'தருக' என்று கூறி அவள் கூந்தலைக் களைந்தாள். அவளை அழகு குறைந்தவளாக ஆக்கிப் புத்த மடத்தில் சேர்த்தாள். அழகு அவளை விட்டு அகன்றது. கலைவாழ்வு கலைக்கப் பட்டது. இது அவள் நிலை” என்று தேவந்தி கூறி விவரித்தாள்.

“இது நாட்டுக்கே பேரிழப்பு ஆகியது; அரசனும் நகரத்து மக்களும் மாணிக்க மணியைக் கடலில் வீழ்த்தி விட்டவர் போன்று கலக்கம் அடைந்தனர். மாணிக்க ஒளி மங்கிவிட்டது. க்லைச்செல்வத்தை இழந்த நிலையில் நாடே துன்பத்துள் ஆழ்ந்துவிட்டது” என்று மேலும் விளக்கினாள்.

“இளமங்கை அவள் தன் எதிர்காலத்தை இழந்தாள். அது பேரிடி யாகியது. அதனால்தான் அடித்தோழி அரற்றினாள். நானும் வருந்தினேன்” என்று கூறித் தன் நிலையையும் எடுத்து உரைத்தாள்.

தேவந்தி வரலாறு

அவ்வாறு கூறிய பின் தேவந்தி தன்பே உணர்வு முத்து தெய்வம் உற்றவளர்கி ஆவேசம் கொண்டு உரை யாடினாள். அவள் மேல் பாசாண்டச் சாத்தன் குடிகொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/179&oldid=936500" இலிருந்து மீள்விக்கப்பட்டது