பக்கம்:சிலம்பின் கதை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளங்கோவடிகள்

227



மொழியினார்' போன்ற ஆட்சிகள் கவர்ச்சி மிக்கவையாக உள்ளன.

அறிஞர் என்று யாரைக் கூறுவது? அது புலமை யையும் கடந்த ஒன்று; எல்லாம் அறிந்தவரைத்தான் அறிஞர் என்று கூறமுடியும். நாடுகளை நன்கு அறிந்தவர்; காடுகளைக் கண்டவர்; செடி, கொடிகள், பூக்கள், நிலத்தின் இயல்பு, காலத்தின் பாகுபாடுகள், மக்கள் வாழ்வியல், களவுக்கலை, அணிகலன்கள் பற்றிய முழு அறிவு, அங்காடிகள், வாணிகம், சிற்பம் எல்லாம் அறிந்தவராக அவர் காணப்படுவதைப் பார்க்கமுடிகிறது. எல்லாத் துறைகளையும் நன்கு அறிந்து கூறுபவராக விளங்குகிறார்; மாதவி கால் முதல் தலை வரை அணியும் அணிகலன் களைக் கூறுவது வியப்பைத் தருகிறது. மதுரை அங்காடித் தெருவில் வைரக் கற்களின் குறைகள், சிறப்புகள், தரங்கள் இவற்றைக் காட்டுவது அவர் பேரறிவைக் காட்டுகிறது. அவருக்குத் தெரியாத துறையே இல்லை என்று கூற முடியும். எல்லாத் துறைகளைப் பற்றிய செய்திகள் இடம் பெறுவதால் காவியம் செறிவுமிக்கதாக விளங்குகிறது. நிறைவு உடையதாகவும் அமைந்துள்ளது.

அவர் தமிழ்ப் புலமை அவர் சொற்களை எடுத்தாள்வதில் விளங்குகிறது. ஒரு செய்தியைக் கூற எவ்வளவு சொற்கள் தேவையோ அவ்வளவும் கூறுவதில் அவர் புலமை காணப்படுகிறது.

நயம் மிக்க தொடர்கள் ஆங்காங்கே எடுத்தாளப் படுகின்றன. மாதவி எழுதிய காதற் கடிதம் அப்புலமைக்குத் தக்க சான்று ஆகும்.

“பவளவாள் நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்நகை கோவலன் இழப்ப"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/228&oldid=937574" இலிருந்து மீள்விக்கப்பட்டது