பக்கம்:சிலம்புத் தேன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் சிறப்பு 7

(பகல் கடைத் தெருவில்) சுற்றலாம்; அல்லங் காடி”யில் (இரவு கடைத் தெருவில்) திரியலாம். கிரேக்கர்களோடு கூடி, ரோமர்களோடு பேசி மகிழலாம்; சர்வதேசிய மணம் கமழும் தமிழ் நாட்டுத் தலைநகர்களில் இரண்டாம் நூற்ருண்டு நாகரிகத் தமிழனுகத் தலை நிமிர்ந்து வாழலாம். வேங்கடத்தில் உறையும் வியன் பெரு ந் தெய்வத்தையும், குமரியில் கோயில் கொண்ட கன்னி அன்னேயையும், திருவரங்கத்தில் பாயல் கொண்ட பெருமானேயும், ஆடக மாடத்தில் அறிதுயில் கொண்டோனேயும், எ வர் க் கும் வணங்காத முடியால் வணங்கிச் செங்குட்டுவன் வலங்கொண்ட செஞ்சடைக் கடவுளையும் கண்டு களி கூரலாம் ; பல்வேறு சமயங்களும் கிறைந்த பழங் தமிழ் நாட்டில் ஒடிப் பாய்ந்த சமரச ஆற்றில் நீராடி உள்ளம் குளிரலாம்; அருமைத் தமிழகம் எங்கணும் நிறைந்திருந்த இயற்கை யின் அழகையும், செயற்கையின் திறனேயும், கலேயின் வளத்தையும், கல்வியின் பெருக்கை யும், வாணிபத்தின் செழிப்பையும் அறிந்து வியக்கலாம்.

சுருங்கச் சொன்னல், எல்லா வகையிலும் உலக நாகரிகங்களுக்கு ஒர் இமயமாய் விளங்கிய இன்பத் த மி ழ கத் தை-நிலத் தொடர்பால் அதோடு சேர்ந்து நிற்கும் நாவலந்தீவின் வட பகுதியை-அதை ஆண்ட கணக்கற்ற வடநாட்டு மன்னரை-அவர் தமிழ் வேந்தர் தாள் போற் றிய திறனே எல்லாம் அறியலாம். அது மட்டுமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/16&oldid=560570" இலிருந்து மீள்விக்கப்பட்டது