பக்கம்:சிலம்புத் தேன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பின் புகழ் 39

மறக்கற்பால் உயர்ந்த மங்கை கண்ணகி வீரஞ் செறிந்த-உணர்வு கலந்த-ஒழுக்கத்தால், விண்ணவரும் மண்ணவரும் முடிவேந்தரும் குடிமக்களும் போற்றும் விழுப்பம் பெற்றவள் கண்ணகி. பெண்ணாய்ப் பிறந்து பெருமை மிக்க தெய்வமான அவளுக்காக நிகழும் வீர வழிபாட்டால்-பத்தினித் தெய்வ வழிபாட்டால்-ஒழுக்க வழிபாட்டால்-பாருலகம் உய்யும். எனவே, ஆட்கிப் பிரிவினைகளாலும் சாதி சமயப் பிணக்குகளாலும் சிறுமையுறும் சமுதாயம் ஒன்றுபட்டு, 'பசியும் பிணியும் நீங்கி, வசியும் வளனும் சுரந்து' வாழும் ஒப்பற்ற சமுதாயமாக உருவாகும் என்பதே இளங்கோ அடிகள் இயற்றிய இன்பத் தமிழ்க் காவியத் தின் ஒரு பெருங் குறிக்கோளாகும்.