பக்கம்:சிலம்புத் தேன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3 சிலம்பின் புகழ்

  • நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று ஒரு மணியாரம் பூண்ட பெருமை தமிழன்னையின் தனிச்சிறப்பாகும். தமிழன்னையின் மணி மார்பில் அணி செய்யும் அவ்வழகிய கவியாரத்தின் புகழ் மண் தேய்த்த மாண்பும் காலங் கடந்த கீர்த்தியும் படைத்தது. தமிழ்க்குலம் கண்ட கலைக்காப்பியத்தின் பெரும்புகழையும் அளவிடற்கரிய பெருஞ் சிறப்புக்களையும் உலக றியச் செய்த சான்றோர் பலராவர். அவர்களுடைய பேருழைப்பு இல்லையானால், மூன்று கோடித் தமிழ் மக்கள் இன்று உலக இலக்கிய அரங்கிலே தலை நிமிர்ந்து நிற்கும் தனிப்பேற்றினை இழந்தே போயிருப்பர். எனவே, சிலம்பின் புகழைப் போற்றும் நாம் அப்பெருமக்களையும் வணக்கத்தோடும் வழி வழிபாட்டுணர்ச்சியோடும் நினைவு கூரல் சாலப் பொருத்தமுடையதாகும். ஒரு பொருளின் உயர்வும் புகழும் அப்பொருளே உலகம் போற்றிப் பயன்கொள்வதால் விளைவன அல்லவா?

சிலம்பின் அடியார் என்று எண்ணும் போது பலரைப் பற்றிய எண்ணம் கற்றவர் உள்ளத்தில் பொங்கி எழும். அவருள் முதன்மை சான்ற இருவர் அச்சு வாகனம் தமிழகத்திற்கு வாராத மிகப் பழங்காலத்தைச்