பக்கம்:சிலம்புத் தேன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 சிலம்புத்தேன்

உரையாசிரியரின் உரைக் குறிப்புக்கள் சிலவற்றால் புலனாகின்றது. ஆயினும், நம் தவக்குறையால் அவ்வுரை கிடைத்திலது.

அரும்பத உரையாசிரியர் பழுத்த சைவர்; ஆனால், பரந்த சமயப் பொது நோக்கம் படைத்த சான்றோர். சிலப்பதிகாரத்தின்பால் அவர் கொண்டிருந்த ஈடுபாடு அப்பெருநூலைப் பற்றி அவர் உள்ளம் உருகிப் பாடியுள்ள உரைப்பாயிரச் செய்யுள் ஒன்றாலேயே இன்று புலனாகின்றது. சிலப்பதிகாரத்திற்குச் சமயக் காழ்ப்பின்றி உரை கண்ட அப்பெருந்தகையார் பத்தினித் தேவியின் புகழ் போற்றும் சிலம்புச் செல்வத்தை இம்மை மறுமை இரண்டிற்கும் பயனளிக்கும் சாத்திர நூலாகவே கருதிய பான்மை வியந்து போற்றற்குரிய.11 '

கரும்பு மிளநீருங் கட்டிக் கனியும் விரும்பும் விநாயகனை வேண்டி-அரும்பவிழ்தார் சேரமான் செய்த சிலப்பதிகா ரக்கதையைச் சாரமாய் நாவே தரி.” இதுவே அரும்பத உரையாசிரியர் மூத்த பிள்ளையாரிடம் செய்துகொண்ட அரிய வழிபாடு. அரும்பத உரையாசிரியரின் ஆராய்ச்சித் திறன் அறிஞர் உலகால் என்றும் நன்றியோடு போற்றிப் பயனடையும் தன்மை வாய்ந்தது. சிலப்பதிகாரத்திற்கு உரிய எத்தனையோ பெருஞ்சிறப்புக்களுள் தலைமை சான்ற ஒன்று அந்நூலுள் பழந்தமிழர் இசை-நாடகம் பற்றிக்